புதிய நாளுக்குள்..

தியானம் (தை 11, 2020)

விசுவாசமில்லாமல் தேவனுக்கு பிரியாமாக இருப்பது கூடாத காரியம்

மாற்கு 10:27

மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.


ஐசுவரியவான் தேவனுடைய ராஜ்யத்தில் பிரவேசிப்பதைப்பார்க்கிலும், ஒட்டகமானது ஊசியின் காதிலே நுழைவது எளிதாயிருக்கும் என்று இயேசு கூறியிருக்கின்றார். அவருக்கு பின் சென்றவர்கள், அப்படியா னால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குள்ளே சொல்லிக் கொண்டார்கள். இந்த பூமியும் அதன் நிறைவும் கர்த்தருடையது ஆகவே, அவர் செல்வத்திற்கு எதிரானவர் அல்ல. அப்படியானால் அவர் ஏன் இப்படியான கடுமையான வார்த் தையைக் கூறினார். பணமானது மனி தர்கள் தேவன்மேல் கொண்டுள்ள விசு வாசத்தைக் கெடுத்து விடக்கூடிய ஒரு பொல்லாத உலக ஆயுதம். தேவன் மேல் இருக்கும் விசுவாசத்தை படிப்ப டியாக தளரச் செய்து, என்னிடம் பணம் இருக்கின்றது, அதனால் நான் எங்கு சென்றாலும் எதையும் சாதித்துக் கொள்வேன் என்ற எண்ணம் உள்ள த்தில் சிறிது சிறிதாக வளர ஆரம்பிக்கும். இந்த பூமிக்குரிய வை களை வாஞ்சிப்பவர்களுடைய கண்களும் இருதயமும் உலக ஐசுவ ரியமுள்ளவர்கள் மேல் இருக்கும். பரலோகத்திற்குரியவைகளை இந்த பூலோகத்திலுள்ளவைகளால் வாங்க முடியாது. பரலோகத்திற்குரிய வைகள் விலைமதிக்கமுடியாதவைகள் ஆனால் அவை இலவசமா னவைகள். பரலோகத்திற்குரியவைகளை விசுவாசம் இல்லாமல் பெற் றுக் கொள்ள முடியாது. ஒரு ஐசுவரியவான் என்னிடம் இருக்கும் செல்வத்தினால் பரலோகம் செல்வேன் என்று எண்ணுவானாக இருந்தால், அவன் மனித பெலத்தில் தங்கியிருப்பதால் அவன் ஊசி யின் காதில் நுழைய எத்தனிக்கும் ஒட்டகம் போல இருப்பான். அதா வது, அது நடைமுறைச் சாத்தியமானதல்ல. ஆனால், தன் பணத்தை ஒருபக்கமாக வைத்துவிட்டு, தேவனால் எல்லாம் கூடும் என்று விசு வாசிப்பானாக இருந்தால், அவன் ஐசுவரியவானாக இருந்தாலும், ஏழையாக இருந்தாலும் அது சாத்தியமாகும். ஏனெனில் தேவனால் கூடாத காரியம் ஒன்றுமில்லை. எனவே பிரியமான சகோதர, சகோ தரிகளே, நீங்கள் யாராக இருந்தாலும், தேவன் மேல் கொண்டுள்ள விசுவாசத்தை காத்துக் கொள்ளுங்கள். தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லை.

ஜெபம்:

சர்வ வல்ல தேவனே, என் பெலத்தினால் ஒன்றும் ஆகாது ஆனால் உம்மால் எல்லாம் கூடும் என்று எப்போதும் நான் உம்மேல் விசுவாசம் வைத்து, அதன்படி வாழ என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - ஏசாயா 55:1