புதிய நாளுக்குள்..

தியானம் (தை 10, 2020)

தேவனோடு வாழும் மேன்மையை உணர்ந்து கொள்ளும் வாழ்க்கை

நீதிமொழிகள் 30:9

நான் பரிபூரணம் அடை கிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல் லாதபடிக்கும். தரித்திரப்ப டுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடி க்கும், என் படியை என க்கு அளந்து என்னைப் போஷித்தருளும்.


அயலிலே இடாம்பிகரமான மாடி வீட்டிலே வசித்து வந்த குடும்பத் தினர், அவ்வப்போது ஞாயிற்றுக் கிழமைகளிலும், மற்றும் விசேஷித்த நாட்களிலும் ஆலயத்திற்கு சென்று வருவார்கள். மற்றும்படிக்கு அவர்கள் வாழ்க்கை தங்கள் வியாபார அலுவல்களில் ஈடுபடுவதிலும், நண்பர்கள், உறவினர்களுடன் பொழுதைப் போக்குவதிலும் ஓடிக்கொ ண்டிருந்தது. அதே அயலிலே, சாதாரண வீடு ஒன்றிலே, எளிமையான வாழ்க்கை வாழும் தேவ பக்தியுள்ள விசுவாசி ஒருவன், அந்த ஐசுவரிய வானின் நிலைiயைக் கண்டு அவர்க ளுக்காக பரிதபித்தார். போதகரே, இப் படியாக உணர்வற்ற வாழ்க்கை வாழ் ந்து கொண்டு, கிறிஸ்தவர்கள் என்ற பெயரைத் தரித்துக் கொள்கின்றார் களே, என்று தன் மனவேதனையை கூறினார். போதகர் அவரை நோக்கி: சகோதரனே, இந்த ஆலயத்தின் ஆர ம்ப நாட்களிலே, அவர்களும் உம் மைப் போல எளிமையான வாழ்க்கை யையே வாழ்ந்து வந்தார்கள். உம்மு டைய அருமையான பிள்ளைகளைப் போல அவர்களுடைய பிள்ளைகளும், கீழ்ப்படிவுள்ளவர்களாக நன்றாகக் கல் வி கற்று வந்தார்கள். அந்நாட்களிலே, அவர்களிடம் அதிகம் பணம் இல்லாதிருந்த போதிலும், தங்களால் முடிந்த அளவு சரீர உதவியை வழங்கி, உம்மைப் போல ஊழியத்தி ற்கு அதிக ஒத்தாசையாக இருந்து வந்தார்கள். படிப்படியாக உலக செல்வமானது அவர்கள் வாழ்க்கையில் பெருக ஆரம்பித்தது. அவர்கள் வாழ்க்கையும் படிப்படியாக மாற ஆரம்பித்தது. இருபது வருடங்களு க்கு பின்பு அவர்கள் இந்த நிலையில் இருக்கின்றார்கள் என்று கூறி னார். இதைக் கேட்ட அந்த பயபக்தியுள்ள விசுவாசிக்கு இரவு நடு ச்சாமம் வரை தூங்க முடியவில்லை. தேவனே, நான் இன்று உணர் வுள்ளவனாக வாழ்வது உம்முடைய சுத்த கிருபை. என்னை உம்மை விட்டு பிரிக்கின்ற எந்த ஒரு காரியத்தையும் என் வாழ்க்கையில் அனுமதிக்காதிருப்பீராக என்று தேவனை வேண்டிக் கொண்டான்.

ஜெபம்:

பரலோக தந்தையே, உம்மோடு நான் கொண்டுள்ள உறவைவிட மேன்மையானது ஒன்றுமில்லை என்னும் உணர்வு என்னுள்ளத்தில் எப்போதும் பற்றியெரியும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:9