புதிய நாளுக்குள்..

தியானம் (தை 09, 2020)

உமது வாக்கை என்னிருதயத்தில் வைத்து வைத்தேன்.

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து,இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயி ருக்கிற மனுஷன் பாக் கியவான்.


இரவும் பகலும் வேதத்தை தியானிக்கின்ற மனுஷன் பாக்கியவான் என்பதன் பொருள் என்ன? 24 மணி நேரமும் வேதப்புத்தகத்தை வாசிப் பவனா? அல்லது 24 மணி நேரமும் பிரசங்கங்களை கேட்டுக் கொண் டிருப்பதா? அப்படியாக அல்ல. மேகம் கறுத்து, காற்று வீசும் போது புயல் வரப் போகின்றது, ஆபத்து நேரிடலாம் என அவசரவசரமாக வீட்டுக்குள் செல்ல ஆயத்தமாகின் றோம். மாலை மயங்கி இருள் சூழும் போது, வெளிச்சம் தேவை என்று தாம தமின்றி விளக்கை கொளுத்தி விடுகி ன்றோம். தெருவிலே வாகனம் ஒன்று அதி வேகமாக வரும் போது, விபத்து நேரிடலாம் என நாங்கள் உடனடியாக ஒதுங்கிக் கொள்கின்றோம். இவை களை மனிதர்கள் எங்கே எழுதி வைத் திருக்கின்றார்கள்? நாட்டின் பிரதமர் அவ்வழியாக பயணம் செய்ய போகி ன்றார் என்றால், அவருடைய மோட்டார் வண்டியையாகிலும் பார்த்து விட வேண்டும் என்று ஆசைப் படுவோம். இவைகளை மனிதர்கள் எங்கே எழுதி வைத்திருக்கின்றார்கள்? முன்பு ஆலோசனையாகக் கூற ப்பட்டதும், தாங்கள் கற்றுக் கொண்டவைகளையும் தங்கள் சுபாவமாக மாற்றியிருக்கின்றார்கள். காலநிலையையும் சூழ்நிலையையும் கண்டவுடன் என்ன செய்ய வேண்டும் என்று மனிதர்கள் இயல்பாக அறிந்திருக்கின்றார்கள். அதே போல காலையிலும் மாலையிலும் மதிய வேளையிலும் இரவிலும் நாங்கள் எதைச் செய்தாலும், எதைப் பார்த்தாலும், எதை கேட்டாலும் தேவனுடைய வார்த்தையின் வெளிச்ச த்தில் அவைகளை தன்னிச்சையாக ஆராய்ந்து பார்ப்பது இயல்பாக மாற வேண்டும். தேவ பிரசன்னம் எங்கள் ஆசையாக மாற வேண்டும். நான் அங்கே சென்றால் பாவமா? இதைப் பார்த்தால் குற்றமா? என்ற கேள்விகளுக்கு இடம் இல்லாதபடிக்கு, தேவபக்தியில்லாத மனிதர் களின் ஆலோசனைகளின்படி நடப்பதும், பாவிகளுடைய வழியில் நிற்பதும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காருவதும் தேவ பிள்ளைகளுக்குரிய காரியம் அல்ல என்பது சுபாவமாக மாற வேண் டும். இவைகளை தன்னிச்சையாக செய்வதற்கு சத்திய வேதம் எப் போதும் எங்கள் இருதயத்தின் தியானமாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ் செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் எப்போதும் என் தியானமாக கொண்டிருக்க என்னை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதிமொழிகள் 3:3