புதிய நாளுக்குள்..

தியானம் (தை 08, 2020)

கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்?

ரோமர் 8:39

நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலு ள்ள தேவனுடைய அன் பைவிட்டு நம்மைப் பிரி க்கமாட்டாதென்று நிச்ச யித்திருக்கிறேன்.


தன் சின்ன வயதிலிருந்து தெருச் சண்டைகளும், அவலெட்சணமான பேச்சுக்களும் நிறைந்திருந்த சூழலில் வளர்க்கப்பட்ட மனிதன், அவைகளைப் பற்றிக் கொள்ளாமல் தன்னைக் காத்துக் கொண்ட தேவ கிருபைக்காக தேவனை ஸ்தோத்தரித்தான். சில வேளைகளிலே எங்கள் வாழ்க்கையின் சூழ்நிலைகள் எங்கள் தெரிவுகள் அல்ல. அல் லது அந்த சூழ்நிலைகளை மாற்றியமைப்பதன் அதிகாரம் எங்கள் கைக ளில் இருக்காது. அப்படியான சூழ்நி லைகளிலும் நாங்கள் எங்கள் பரிசுத் தத்தை காத்துக்கொள்ளும்படிக்கு வேத த்திலுள்ள பாத்திரங்களை உற்று நோக் கிப் பார்க்க வேண்டும். யோசேப்பு என்ற பிள்ளை, வீட்டிலே தன் அண்ணன்மார் களால் பகைக்கப்பட்டான். பின்பு சொந்த சகோதரர்களாலே அடிமையாக விற்க ப்பட்டு, அந்நிய தேசத்திலே ஒரு அதிகாரியின் வீட்டில் பணிபுரிந்து வந்தான். அங்கிருந்து, அவன் செய் யாத குற்றத்திற்காக அவனை சிறையிலே போட்டார்கள். இந்த சூழ் நிலைகள் ஒன்றும் அவனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கவில்லை. ஆனாலும் அவன் பாவம் செய்யாதபடிக்கு தன் விவகாரங்களிலே எச்சரிக்கையாக இருக்கும்படி தேவன் அவனுக்கு பெலன் கொடு த்தார். தானியேல் என்ற வாலிபன், இளம் வயதிலே சிறைபிடிக்க ப்பட்டு அந்நிய தேசமொன்றின், அரண்மனையிலே சேவை புரிந்து வந் தான். அவனுக்கு வேண்டிய சுகபோகங்களும், களியாட்டங்களும் அவ னுக்கு இருந்தது. ஆனால் அவை ஒன்றையும் அவன் தொடாதபடி க்கும் பரிசுத்தத்தை காத்துக் கொள்ளும்படிக்கும் தேவனுக்கு கீழ்ப்படி வுள்ளவனாக இருந்தான். இப்படியாக எங்களுக்கு முன்பாக பல பரி சுத்தவான்கள் வாழ்ந்து கடந்து சென்றிருக்கின்றார்கள். எங்கள் மத்தி யிலும் இன்னும் அப்படியான சாட்சிகளை காண்கின்றோம். கோண லும் மாறுபாடுமான சந்ததியின் நடுவிலே நாங்கள் வாழ்ந்து கொண்டி க்கின்றோம். அவர்கள் நடுவிலே மாசற்றவர்களாக இருக்கும்படிக்கு மேகம் போல திரளாக எங்களை சூழந்திருக்கும் சாட்சிகளைப் பார்த்து, அவர்களைப் போல எங்கள் கண்களை கர்த்தராகிய இயேசுவின் மேலே பதியவைத்தவர்களாக பரிசுத்தத்தோடு முன்னேறிச் செல்வோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, எந்த சூழ்நிலைகளும் உம்முடைய அன்பைவிட்டு நம்மை பிரிக்க முடியாது என்ற உறுதியான விசுவாசத்துடன் நான் வாழ என்னை வழிடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1