புதிய நாளுக்குள்..

தியானம் (தை 07, 2020)

என் இதயத்தின் தியானங்கள், தேவனுக்குப் பிரியமாக இருக்கட்டும்

சங்கீதம் 19:14

என் கன்மலையும் என் மீட்பருமாகிய கர்த்தா வே, என் வாயின் வார்த் தைகளும், என் இருத யத்தின் தியானமும், உமது சமுகத்தில் பிரீதி யாயிருப்பதாக.


“அவன் என்னைப் பற்றி இழிவாக பேசுவதற்கு இப்படியாகத் துணிகரம் கொண்டான. விடியும் போது நான் யார் என்று அவனுக்குத் தெரியும்” என்று ஒரு மனிதன் தன் படுக்கையில் இருந்து அக்கிரமத்தை யோசி த்து, பொல்லாப்புச்செய்ய எத்தனம்பண்ணிக் கொண்டிருந்தான். இப் படியான எண்ணங்கள் மனிதர்களுக்கிடையே வன்மத்தையும் பகை யையும் உண்டு பண்ணும். அதன் முடிவு தனக்குத் தானே அழிவாக இருக்கும். தாம்; நினைத்த தீமையை செய்து முடித்தால் மனதில் திரு ப்த்தி உண்டாகும் என்று சில மனிதர்கள் எண்ணங் கொள்கின்றார்கள். தீமையை நிறை வேற்ற வேண்டும் என்று மாம்சத்திற்குரிய மனிதன் (மாம்ச உணர்வுகளின்படி சிந்திக்கும் மனிதன்) யோசனைகளைச் செய்வான். இவை மாம்சத்தின் எண்ணங்கள். எடுத்துக் காட்டாக, பழிவாங்கு, களவு செய், பொய் சொல், மோக பாவம் செய் என்ற எண்ணங்கள் மாம்சத்துக் குரியவைகள். இவைகளினால் மனி தனுடைய மனம் திருப்தியாவதில்லை. இவை மனிதனுடைய வாழ்வை மோசம் போக்கும் பாவங்கள். ஆவிக்குரிய மனி தன் (தேவனுடையவைகளை சிந்திக் கும் மனிதன்) உண்மையுள்ளவைகளெவைகளோ, ஒழுக்கமுள்ளவை களெவைகளோ, நீதியுள்ளவைகளெவைகளோ, கற்புள்ளவைகளெவை களோ, அன்புள்ளவைகளெவைகளோ, நற்கீர்த்தியுள்ளவைகளெவைக ளோ, புண்ணியம் எதுவோ, புகழ் எதுவோ அவைகளையே சிந்தித் துக் கொண்டிருப்பான். இரவாக இருந்தாலும், பகலாக இருந்தாலும், பாவ இச்சைகளை நிறைவேற்றும் மாம்சமான காரியங்களை சிந்தி க்கவே கூடாது. அப்படி நாங்கள் சிந்திக்கும் போது எங்கள் மனதை நாங்கள் சாத்தானின் பணிமனையாக (வேலை செய்யும் இடம்) மாற்றி விடுகின்றோம். ஒரு வேளை நான் அப்படியாக பெரும் பாதகங்களை சிந்திப்பதில்லை என்று நீங்கள் கூறலாம். அத்துடன் நிறுத்தி விடாமல். உண்மை, ஒழுக்கம், நீதி, கற்பு, அன்பு, நற்கீர்த்தி, புண்ணியம் புகழ் உள்ள காரியங்களையே நாங்கள் சிந்தித்துக் கொண்டிருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, மனிதர்கள் எனக்குத் தீமை செய்தாலும், நான் உமக்குகந்தவைகளையே எப்போதும் பேசவும், உமக்குப் பிரியமானவைகளை சிந்திக்கவும் என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்ச கர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 4:8