புதிய நாளுக்குள்..

தியானம் (தை 06, 2020)

தூங்க முடியாமல் மனம் அங்கலாய்கும் இராச்சாமங்கள்

சங்கீதம் 63:6

என் படுக்கையின்மேல் நான் உம்மை நினைக்கும்போதுஇ இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.


தாவீது ராஜா, தேவனை நோக்கி அமர்ந்திருந்து, அவருடைய பிரமாணங்களைத் தியானித்து, தேவனுடைய வழியில் எப்போதும் கண்ணோ க்கமாயிருப்பதையே வாஞ்சித்தார். தன்னுடைய பெலவீனத்தால் இக்க ட்டும் நெருக்கமும்; சூழ்ந்து கொண்ட போது, தேவனுடைய சமுகத்திலே சேர்ந்து, அவருடைய நிழலில் அடைக்கலம் புகுந்தார். சில வேளை களிலே நாங்கள் படுக்கைக்கு சென்றா லும் தூங்க முடியாமல், மனம் சஞ்சல ப்பட்டுக் கொண்டிருக்கும் சூழ்நிலைக ளை தாவீது ராஜாவும் தன் வாழ் வில் கடந்து வந்தார். அந்த நேரங்க ளிலே, படுக்கையில் இருந்து அவர் தேவனைக் குறித்தும், அவருடைய கிரு பையைக் குறித்தும், அதிசயமான செய ல்களைக் குறித்தும் தியானித்துக் கொண்டிருந்தார். “என் படுக்கையின் மேல் நான் உம்மை நினைக்கும்போது, இராச்சாமங்களில் உம்மைத் தியானிக்கிறேன்.” என்று பாடினார். எங்கள் வாழ்க்கையிலும் நிம்மதியை இழந்து, மனம் சஞ்சலப்பட்டுக் கொண்டிருக்கும் நாட்கள் வருவதுண்டு. இரவில் படுக்கைக்கு சென்றால் தூங்க முடியாமல் மனம் எதையோ நினைத்து பதைபதைத்துக் கொண்டிப்பது போல இருக்கும். நாங்கள் இப்படிப்பட்ட இரவுகளை எப்படிக் கடக்கின்றோம் என்பதை சற்று சிந் தித்துப் பார்க்க வேண்டும். இப்படியான இராத்திரிகளை சிலர் பெரு மூச்சோடு கடக்கின்றார்கள். அந்த வேளைகளிலே படுக்கையிலே தேவ னாகிய கர்த்தரைக் குறித்து தியானியுங்கள். அவர் உங்கள் வாழ்க்கை யில் செய்த அதிசயங்களை எண்ணிப் பாருங்கள். தேவனுடைய அதிச யமான நாமங்களை மனதிலே அறிக்கையிடுங்கள். அவருடைய பிரமா ணங்களை தியானியுங்கள். வாக்குத்தத்தங்களை அறிக்கையிடுங்கள். “இயேசுவின் நாமத்தில் ஜெயம் எனக்கு உண்டு” என்று திரும்பத் திரும்ப அறிக்கையிடுங்கள். இந்த வார்த்தைகளால் உங்கள் மனம் தேற்றப்படும். “இக்கட்டும் நெருக்கமும் என்னைப் பிடித்தது ஆனாலும் உம்முடைய கற்பனைகள் என் மனமகிழ்ச்சி” என சங்கீதங்காரன் பாடி னார். ஏனெனில் அவருடைய கற்பனையின் வழியில் ஆறுதல் உண்டு! எனவே, இன்றிலிருந்து, மனக் குழப்பமான இராத்திரிகளிலே ஆறுதலின் தேவனையும், அவருடைய வல்ல கிரியைகளையும் தியானியுங்கள்.

ஜெபம்:

இக்கட்டு நேரத்தில் என் துணையான கர்த்தாவே, மனம் அங்கலாய்க்கும் இராச் சாமங்களிலே உம்மையும், உம்முடைய வல்ல கிரியைகளையும் தியானிக்கும்படி என்னை வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:143