புதிய நாளுக்குள்..

தியானம் (தை 04, 2020)

தேவனுக்குப் பயந்து அவருடைய வார்த்தையின்படி வாழ்வோம்.

மத்தேயு 10:28

ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.


ஒரு தொழிற்சாலையிலே வேலை பார்த்து வந்த ஒரு மனிதன், தன் வேலையிலே கவனமற்றிருந்ததால் அந்த நாளிலே உற்பத்தி செய்ய ப்பட்ட சில பொருட்கள் பாதிப்படைந்து விட்டது. இவனுடைய கவ லையீனத்தை சக ஊழியன் ஒருவன் கண்டு கொண்டான். இந்த விட யத்தை சக ஊழியன் மேற்பார்வையாளருக்கு எப்படியும் அறிவிப் பான் என்றறிந்து அதற்கு தப்பித்துக் கொள்வதற்கான உபாய தந்திர ங்களை பற்றிக் கடுமையாக யோசித் துக் கொண்டிருந்தான். அன்றிரவு நித் திரைக்குச் சென்ற அவனால் தூங்க முடியவில்லை. அவன் தன் படுக்கை யிலும், தப்பித்துக் கொள்வதற்கான குறு க்கு வழிகளைப் பற்றியே சிந்தனை செய்து கொண்டிருந்தான். பிரியமான சகோதரரே, இப்படியான சூழ்நிலை யில் நீங்கள் அகப்பட்டிருந்தால், ஒரு உத்தம ஊழியனாக விளங்கு வதற்கு என்ன செய்வீர்கள்? உங்கள் தவறையும் அதற்குரிய அபராத த்தையும் ஏற்றுக் கொள்ளுகிறேன் என்று நீங்கள் கூறுவீர்கள் அல் லவா. தேவனைப் பற்றிக் கொண்டு வாழும் வாழ்க்கை என்பது, எங் கள் இருதயம் எப்போதும் தேவனை சார்ந்து, அவரைப் பிரியப்படுத் துகின்ற வாழ்க்கையை வாழ்வதேயாகும். தேவனுடைய வார்த்தைக்கு கீழ் ப்படிந்து நாங்கள் செய்யும் நற்கிரியையானது நல்ல நிலத்தில் விதை க்கப்பட்ட விதையைப் போன்றது. அந்த விதை வளர்ந்து பெரிதான பலனைத் தரும். அதேபோல தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியா மல் நாங்கள் செய்யும் எந்தக் கிரியையும் தீவினையை விதைக்கின்ற மனு~னுக்கு ஒப்பாக இருக்கும். அந்த விதை வளர்ந்து பெரும் பாத கத்தை உண்டு பண்ணும். தொழிற்சாலையிலே வேலையில்லாமல் போனாலும், வாழ்வில் ந~;டம் வந்தாலும், மனிதர்கள் என்ன சொன்னாலும், தேவனுக்குப் பயந்து உண்மையை பேசுவதே ஒரு உத்தம ஊழியனின் பண்பு. பெலவீனங்கள் எங்கள் யாவருடைய வாழ்க்கையிலும் வருவதுண்டு. அவைகளை உணரும் போது, நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ் செய்யுங் கிரு பையை அடையவும் காலதாமதமின்றி தேவனைக் கிட்டிச் சேர வேண் டும். எங்கள் ஆத்துமாவுக்கு நாங்கள் நன்மை செய்யும்படிக்கு தேவனு க்குப் பயந்து, அவரைப் பிரியப்படுத்தும் வாழ்க்கை வாழ வேண்டும்.

ஜெபம்:

என் உள்ளந்திரியங்களை அறிந்த தேவனே, இந்த உலகிலே எனக்கு நஷ்டம் வந்தாலும் உம்மைச் சார்ந்து உம்மைப் பிரியப்படுத்தும் நற்சாட்சியான வாழ்க்கை வாழ என்னை பெலப்படுத்துவிராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:16