புதிய நாளுக்குள்..

தியானம் (தை 02, 2020)

என்றென்றைக்கும் எங்களுடனேகூட இருக்கும் சர்வ வல்லமையுள்ள தேவன்

மத்தேயு 28:20

இதோ, உலகத்தின் முடிவுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்க ளுடனேகூட இருக்கிறேன் என்றார். ஆமென்.


நாற்பது வருடங்களாக எகிப்திலே பார்வோனுடைய அரண்மனையில் வளர்ந்து வந்த மோசேக்கு, எகிப்து ராஜ்யம் எவ்வளவு பலமுள்ளது என்றும், பார்வோனின் ஆட்சியும் அவனுடைய சேனையும் எவ்வளவு கடினமானதென்பதையும் நன்கு அறிந்திருந்தான். இப்போது, எகிப்தை விட்டுப் புறப்பட்டு மேலும் நாற்பது வருடங்கள் ஆகிவிட்டது. சரீரத்திலிருந்த பெலன் குறுகிப்போயி ருக்கும். அவனுக்கு இப்போது ஆடு களை மேய்ப்பதே தொழிலாக இருந் தது. இந்த வேளையிலே, எகிப்துக்கு மறுபடியும் போய், பார்வோன் முன்னி லையில் தரிசனமாகி, அடிமைத்தன த்திலிருக்கும் ஜனங்களை விடுதலை செய் என்று சொல்லும்படிக்கு தேவன் மோசேயை அழைத்தார். நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு பயங் கரமும் சவால் நிறைந்ததுமான பொறுப்பு. மோசே தேவனை நோக்கி: பார்வோனிடத்திற்குப் போகவும், இஸ்ரவேல் புத்திரரை எகிப்திலிருந்து அழைத்துவரவும், நான் எம்மாத்திரம் என்றான். அதற்கு அவர்: நான் உன்னோடே இருப்பேன்; நீ ஜனத்தை எகிப்திலிருந்து அழைத்து வந்த பின், நீங்கள் இந்த மலையில் தேவனுக்கு ஆராதனை செய்வீர்கள்; நான் உன்னை அனுப்பினேன் என்பதற்கு இதுவே அடையாளம் என்றார். அதே போல இந்த ஆண்டிலும் நாங்கள் எதிர் நோக்க வேண் டிய அநேக சவால்கள் எங்களுக்கு முன்பாக இருக்கலாம். அவை நினைத்துப் பார்ப்பதற்கு பெரியதாக இருக்கலாம். எங்களுடைய பெலத்துக்கு மிஞ்சிப் போனதாக இருக்கலாம். உலகம் முழுவதுமே எங்களைப் பகைக்கலாம். கலக்கம் வேண்டாம்! திகிலடைய வேண் டாம். தேவ ஊழியராகிய மோசேக்கு கொடுத்த அதே தேவ ஆவியை தேவன் எங்களுக்கும் கொடுத்திருக்கின்றார். இதோ, உலகத்தின் முடி வுபரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனேகூட இருக்கிறேன் என்று இயேசு கூறியிருக்கின்றார். மோசேக்கு வெற்றியைக் கொடுத்த தேவன், இந்த உலகத்தை நாங்கள் ஜெயிக்கும்படிக்கு ஒவ் வொரு கணப்பொழுதிலும் எங்களோடுகூட இருந்து, பெலன் ஈந்து வழிநடத் துவார். வானத்திற்கும் பூமிக்கும் அதிபதியாகிய இயேசு எங்களோ டிருக்கின்றார்.

ஜெபம்:

பரலோக தேவனே, எனக்கு முன்பாக என்ன இரு க்கின்றது என நான் அறியேன், ஆனால் நீர் என்னோடு கூட இருக்கின்றீர் என்பதை நான் விசுவாசிக்கின்றேன். மன உறுதியுடன் முன்னேறிச் செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத்திராகமம் 3:12