புதிய நாளுக்குள்..

தியானம் (தை 01, 2020)

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்

ஏசாயா 49:16

இதோ, என் உள்ளங்கைகளில் உன்னை வரைந்திருக்கிறேன்; உன் மதில்கள் எப்போதும் என் முன் இருக்கிறது.


இன்னுமொரு புதிய ஆண்டை இந்த பூவுலகத்தில் காணும்படிக்கு கர் த்தர் எங்களுக்கு கிருபை செய்திருக்கின்றார். இந்த உலகமும், அதன் குடிகளும் காலத்திற்கு காலம் மாறிப் போகலாம் ஆனால் எங்கள் தேவனாகிய கர்த்தர் காலத்தோடு மாறிப் போகின்றவர் அல்லர். அவர் பொய் சொல்ல ஒரு மனிதன் அல்ல. மனம்மாற அவர் மனுப்புத்திர னும் அல்ல. எங்களுக்கு என்று முன் குறித்த சகலவற்றையும் அதன் அதின் காலத்திலே அழகாக செய்து முடிக்கி ன்றவராயிருக்கின்றார். சற்று சிந்தித்துப் பாருங்கள். பால் குடிக்கும் பாலகனை தாய் மறந்து போவாளோ? இல்லை, தாய் தன் பாலகனை குறித்து எப்போ தும் அன்புள்ளவளாகவே இருக்கின் றாள். ஆனாலும், ஆங்காங்கே, சில நாடு களிலே தாய் தான் பெற்ற பிள்ளை யைக் கைவிட்டாள் என்ற செய்திகளைக் கேட்கின்றோம். அது வலு அபூர்வமான செய்தியாக இருக்கின்றது. அப்படி ஒரு தாய் தன் பால கனை மறந்து போனாலும், நான் உன்னை மறந்து போவதில்லை என்று தேவனாகிய கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு கூறியிருக்கின் றார். அவருடைய பார்வையிலிருந்து, அவருடைய பாதுகாப்பிலிருந்து ஒருவரும் எங்களைப் பறித்துக் கொள்ள முடியாது. நான் அவைக ளுக்கு நித்திய ஜீவனைக் கொடுக்கிறேன்; அவைகள் ஒருக்காலும் கெட்டுப்போவதில்லை, ஒருவனும் அவைகளை என் கையிலிருந்து பறித்துக்கொள்வதுமில்லை. அவைகளை எனக்குத் தந்த என் பிதா எல்லாரிலும் பெரியவராயிருக்கிறார்; அவைகளை என் பிதாவின் கையி லிருந்து பறித்துக்கொள்ள ஒருவனாலும் கூடாது. என்று இயேசு கூறி யிருக்கின்றார். என்றென்றைக்கும் எங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை தந்திருக்கின்றார். அவருடைய அரவணப்பைவிட்டு பிரிந்து போகாதபடிக்கு, எங்களை தம்முடைய உள்ளங்கையில் வரைந்து வைத்திருக்கின்றார். எங்களுக் குரிய பாதுகாப்பு அவருக்குள் இருக்கின்றது. எனவே கலங்காமல், திகை யாமல், தேவன் கூறிய வாக்குத்தத்தங்களை விசுவாசத்துடன் அறிக்கை செய்து இந்த ஆண்டில் எங்கள் காலடிகளை நேர்;த்தியாக எடுத்து வைப்போம். எங்கள் மதில்கள் கர்த்தர் கண்முன் இருக்கின்றது.

ஜெபம்:

அன்பின் தேவனே, ஒருவேளை தாய் தன் பாலகனை மறந்தாலும், நீர் என்னை ஒருபோதும் மறந்து போவதில்லை. உமது அரவணைப்பில் என்னை வைத்திருக்கும் பெரும் கிருபைக்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:28-29