புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 31, 2019)

இதுவரை நடத்திய தேவன்

2 சாமுவேல் 7:18

கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவ ரைக்கும் கொண்டுவந்த தற்கு, நான் எம்மாத்தி ரம்? என் வீடும் எம்மா த்திரம்?


நாட்கள், மாதங்கள், ஆண்டுகள் மாறிக் கொண்டு போகின்றது. தேச த்தின் ஆட்சிகளும்; மாறிப் போகலாம். புல்லின் பூவைப் போல மனி தனுடைய நாட்களும் முடிந்து போகின்றது. எங்களை சுற்றியிருக்கின்ற மனிதர்கள் மாறிப் போகலாம். நாங்களும் அந்த மாற்றங்களுக்கு விதிவிலக்கானவர்கள் அல்லர். ஆனால் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராக இருக் கின்றார். கடந்து செல்லும் இந்த ஆண் டைத் திரும்பிப் பாருங்கள்! எங்கள் தேவன் எப்படியாக எங்களோடு கூட இருந்தார் என்று சற்று சிந்தித்துப் பாருங்கள். நல்ல தகப்பனைப் போல, தேற்றும் தாயைப் போல, வழிடத்தும் நல்ல மேய்ப்பனைப் போல எங்களை வழிநடத்தி வந்தார். இஸ்ரவேல் ஐன ங்களை வனாந்திரத்தில் வழிநடத்திச் சென்றது போல, இன்றைய உலக த்தில், ஒரு மனிதனானவன் தன் பிள்ளையைச் சுமந்து கொண்டு போவதுபோல, இந்நாள் வரைக்கும், நடந்து வந்த வழிகள் எல்லாவற் றிலும், எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களைச் சுமந்து கொண்டு வந்தார். ஒருவனை அவன் தாய் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் என்ற வாக்குத்தத்தத்தின்படி அவர் உண் மையுள்ளவ ராக இருந்து எங்களைத் தேற்றுகின்றார். ஆட்டுக்குட்டிகளைத் தமது புயத்தினால் சேர்த்து, தமது மடியிலே சுமந்து கறவலாடுகளை மெதுவாய் நடத்துவார் என்ற பிரகாரமாக தம் மேய்ச்சலின் ஆடுக ளாகிய எங்களுக்காக தம் உயிரையே கொடுத்த நல்ல மேய்ப்பனா கிய இயேசு, எங்கள் நிலைமையை நன்றாக அறிந்து அதன் பிரகார மாக எங்களை வழிநடத்தி வந்தார். தாவீது ராஜா கூறியது போல, கர்த்தராகிய ஆண்டவரே, தேவரீர் என்னை இதுவரைக்கும் கொண்டு வந்ததற்கு, நான் எம்மாத்திரம்? என் வீடும் எம்மாத்திரம்? என்று கூறியது போல நாங்களும் இந்நாளிலே எங்கள் தேவனாகிய கர்த் தருக்கு மனதார நன்றி செலுத்த வேண்டும். அவருடைய அநாதி தீர்மானத்தின்படி, எங்களை முன் குறித்த தேவன், அப்பா பிதாவே என்று கூப்பிடும்படியான பெரிதான சிலாக்கியத்தை எங்களுக்கு கொடுத்தார். இதுவரை நடத்தி வந்த தேவன், மகிமையிலே அவரைத் தரிசிக்கும் நாள்வரை எங்களைக் காத்து வழிநடத்துவார். ஆமேன்!

ஜெபம்:

இதுவரை நடத்தி வந்த அன்புள்ள பிதாவே, நீர் எங்களோடே கூட இருக்கின்றீர் என்பதை உணர்ந்து கொள்ளும்படிக்கு பிரகாசமுள்ள மனக் கண்களை தந்து எங்களை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 40:11