புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 30, 2019)

சுவையான புதுக் கனிகள்

யோவான் 15:8

நீங்கள் மிகுந்த கனிகளைக் கொடுப்பதினால் என் பிதா மகிமைப்படுவார், எனக்கும் சீஷராயிருப்பீர்கள்.


ஒரு மனிதன் தன் பண்ணையின் ஒரு பகுதியில் செவ்விளனீர் கன்றை நாட்டி நன்றாக பராமரித்து வந்தான். குறித்த பருவத்திலே அந்த மர த்தில் ஒரு குலை செவ்விளனி காய்த்தது. அந்த பருவத்துடன் அந்த மரத்தில் எந்த செவ்விளனியும் காய்க்கவில்லை. அந்த மனிதனும், எருக்களைப் போட்டு, ஒரு செவ்விளனி மரம் காய்ப்பதற்கு வேண்டிய எல்லாவற்றையும் செய்து பார்த்தான் ஆனால் ஆண்டுகள் கடந்தும் அந்த மரத்தில் எந்த செவ்விளனியும் காய் க்கவில்லை. “அட இந்த மரம் முதல் பருவத்தில் காய்த்தது தானே, எனவே அவன் அந்த மரம் அப்படியே இருக் கட்டும்” என்று விட்டு விடுவானோ? குறிப்பிட்ட காலத்திற்குள் அதை தறி த்து விடுவான் அல்லவோ! கிறிஸ்த வனின் வாழ்க்கையானது பருவத்தில் கனி கொடுக்கும் மரத்தைப் போன்ற வாழ்க்கையே. வெப்ப காலத்திலும் தாழ்ச்சியில்லாமல் கனி கொடுக்கும் வாழ்க்கை. பத்து வருடங்களுக்கு முன்பு அந்த சகோதரன் இப்படியாக எனக்கு கெடுதி செய்தான், அவனை நான் மன்னித்து விட்டேன் என்று கடந்த காலத்திலே நடந்த ஒரு நற்கிரியையை கூறிக் கொண்டே இருப்பது, ஒரு பருவத்தில் காய் காய்த்து ஒய்ந்து போன செவ்விளனி மரத்திற்கு ஒப்பான வாழ்க் கையாகவே இருக்கும். எனவே பழைய கனிகளினாலே நாங்கள் திரு ப்தியடைந்து விட முடியாது. ஒரு மரமானது அதன் கனிகளினாலே அறியப்படுவது போல, எங்கள் வாழ்க்கையிலும் நாங்கள் கொடுக்கும் கனியினாலே நாம் அறியப்படுவோம். போன வருடத்தில் நான் தேவ னுக்குப் பிரியமானவனாக வாழ்ந்து வந்தேன், ஆனால் இந்த வருடத் திலே அப்படி வாழ முடியவில்லையே என்று கடந்த வருடத்தின் அறிக்கையை நாம் பற்றிக் கொண்டிருக்கலாகாது. இந்த வருடத்தின் கணக்கில் பின்னடைவு ஏற்பட்டிருந்தால், குற்ற உணர்வினால் சோர் ந்து போய்விடாதிருங்கள். உங்களையே நீங்கள் நியாந்தீர்த்து பின்வா ங்கிப் போய்விடாதிருங்கள். கணக்கு பார்ப்பதன் நோக்கம் அதுவல்ல. குறைவுகள் இருப்பின் அவை நிறைவாகத் தக்கதாகவும், நற்கனிகளை கொடுப்பவர்கள் இன்னும் அதிகமாகக் கொடுக்கத் தக்கதாகவும். பரம பிதா எங்களில் மகிமைப்படும்படியாகவும், இயேசுவின் சீ~ர்களாக நாங்கள் வாழும்படிக்கு எமது கணக்கானது பார்க்கப்படல் வேண்டும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, கடந்ததும், முடிந்து போனதுமான பழைய காரியங்களிலே நான் திருப்த்தியடையாமல், இன்றும் எப்போதும் உமக்கு பிரியமான நற்கனிகளைக் கொடுக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கலாத்தியர் 5:22-23