புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 29, 2019)

உங்களை ஆராய்ந்து பாருங்கள்

புலம்பல் 3:40

நாம் நம்முடைய வழிகளைச் சோதித்து ஆராய்ந்து, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவோம்.


வருட இறுதியின் கடைசி மாதத்தில், கம்பனியில் வேலை பார்க்கும் யாவரும் ஆண்டின் ஆரம்பத்தில், தங்களுக்கு ஒப்புவிக்கப்பட்ட பொறு ப்பை அவரவர் நிறைவேற்றி முடிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உசார் நிலையில், கருத்தோடு வேலை செய்தார்கள். விற்பனை பிரி வில் வேலை செய்பவர்கள், இந்த ஆண் டில் தாங்கள், தங்கள் இயக்குனரு க்கு கொடுத்த வாக்கின்படி முன் குறி த்த இலக்கை எப்படியாவது அடைய வேண்டும் என்று பிரயாசப்பட்டார்கள். கம்பனியின் நிர்வாகிகள், கம்பனியின் செயற்பாடுகளும், வரவு செலவுகளும், இலாபமும், அந்தக் கம்பனியின் சொந் தக் காரருக்கு வருட ஆரம்பத்தில் கொடுத்த முன் அறிக்கையின்படி, சட்டபூர்வமாக சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது என்று கூறும்படிக்கு அதிகமாக செயற்பட்டார்கள். இப்படியாக எல்லா கம்பனிகளும், அமைப்புக்களும் தங்கள் செயற் பாடுகளையும், முக்கியமாகப் பொருளாதார நிலைமையையும் குறித்து கரிசனையுடன் கணக்குப் பார்க்கின்றார்கள். இவை யாவும் இந்த உல கத்துடன் முடிந்து போகின்ற காரியங்களாக இருந்தாலும், சிரத்தை யுடன் அதை கணக்கொப்புவிக்கும்படிக்கு இரவு பகலாக உழைக்கி ன்றார்கள். அப்படியானால், அழியாத நித்தியமான ராஜ்யத்திற் கென்று அழைக்கப்பட்ட நாங்கள் எப்படியாக உழைக்க வேண்டும் என்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு நாள், சரீரத்தில் அவனவன் செய்த நன்மைக்காவது தீமைக்காவது தக்க பலனை அடையும்படிக்கு, நாமெ ல்லாரும் கிறிஸ்துவின் நியாயாசனத்திற்கு முன்பாக வெளிப்பட வேண்டும். அந்த நாள் வரைக்கும் எப்படியாவது வாழ்வோம் என்றி ருக்காமல், அவ்வப்போது எங்கள் நிலைமையை நாங்கள் ஆராய்ந்து பார்த்து, கர்த்தருடைய வாக்கின்படி எங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்வது நல்லது. வருட தொடக்கத்திலே, நாங்கள் எங்களுடைய உள்ளான மனிதன் எப்படியாக இருந்தான். இப்போது எவ்வளவாய் புதிதாக்கப்பட்டிருக்கின்றது? தேவனை அறிகின்ற அறிவிலே நான் முன்னேறியிருக்கின்றேனா? என் வாழ்வின் சமாதானம் பெருகியிரு க்கின்றதா? பிரியமானவர்களே, இது நியாயத்தீர்ப்பின் காலம் அல்ல. இது தேவ கிருபையின் காலம்! எனவே தைரியத்துடன் உங்கள் நிலையை ஆராய்ந்து பார்த்து கர்த்தர் அண்டையிலே சேருங்கள்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், இந்நாட்களிலே நான் என்னை ஆராய்ந்து பார்த்து உம் அண்டை சேர வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 4:15-16