புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 28, 2019)

பரம பிதா நேசிக்கின்றார்

வெளிப்படுத்தல் 3:19

நான் நேசிக்கிறவர்க ளெ வர்களோ அவர்களைக் கடிந்துகொண்டு சிட்சிக் கிறேன்;. ஆகையால் நீ ஜாக்கிரதையாயிருந்து, மனந்திரும்பு.


ஒரு மனிதனானவன் தன் மனைவியையும், ஐந்து பிள்ளைகளை யும் அழைத்து குடும்ப நிலையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தான். நாங்கள் எந்தெந்த விடயங்களில் தவறுகின்றோம், அதனால் குடும்ப முன்னேற்றம் எப்படியாக பாதிக்கப்படுகின்றது என்று பன்மையிலே பேசிக் கொண்டிருந்தார். யாவரும் மௌனமாக இருந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள். அதன் பின்பு, மூத் தவன் எங்கே தவறினான், அடுத்தவன் எங்கே முன்னேற வேண்டும் என்று கூற ஆரம்பித்ததும், அங்கே கலரவம் தொடங்கியது, தம்பி அப்படி செய் ததால் நான் இப்படி செய்தேன், அண் ணன் இதை செய்யாததால் நான் அதைச் செய்யவில்லை என்று தங்கள் நிலைமையை நியாயப்படுத்த ஆரம்பி த்தார்கள். இந்த சம்பவத்தை சற்று சிந் தித்துப் பாருங்கள். “நாங்கள் பாவி களும் துரோகிகளுமாயிருந்தோம்;” என்று பன்மையில் கூறுவதற்கு விசுவாசிகள் யாவரும் ஆயத்தமுள்ள வர்களாக இருக்கின்றார்கள். “நான்; பாவியும் துரோகியுமாயிருந்தேன்;;” என்று ஒருமையில் பேசுவதை பொதுவாக விசுவாசிகள் விரும்புவ தில்லை. அதே போலவே, எங்கள் சபை ஐக்கியம் வளர்ச்சியடையு ம்படி எங்களில் இருக்கும் குறைகள் என்று ஒரு ஊழியர் பேசினால் யாவரும் கேட்டுக் கொண்டிருப்பார்கள். ஆனால், ஒருவனைப் பார்த்து, நீ அல்லது உன்னுடைய மனைவி அல்லது உன்னுடைய பிள்ளைகள் என்று தயவாய் கூப்பிட்டு, தனிப்;பட்ட ரீதியில் கூறினாலும் அதை ஏற் றுக் கொள்ள மறுத்து விடுவார்கள். அந்த விசுவாசியை பாருங்கள், இந்த மனிதனைப் பாருங்கள், அவனுடைய பிள்ளைகளைப் பாருங்கள் என்று பெரிதான பிரச்சனைகளை ஆரம்பித்து விடுவார்கள். கர்த்தர் தான் நேசிக்கின்றவர்களை கடிந்து கொண்டு சிட்சிக்கின்றார். எங்க ளிலோ அல்லது எங்கள் குடும்பத்திலோ ஏதாவது தவறு இருக்குமா யின், அதைத் சுட்டிக் காட்டும் போது திருத்திக் கொள்வது எங்களுக் கு நல்லது. மற்றவன் கீழ்ப்படிவற்ற வாழ்க்கை வாழப் போகின்றேன் என்று தீர்மானம் செய்திருந்தால், அவனை நோக்கிப் பார்க்காதிருங் கள். எங்கள் பரமதந்தை தான் நேசிக்கின்றவர்கள் இன்னும் அதிக கனி களை கொடுக்கும்படி அவர்களை தினமும் பரிசுத்தப் படுத்துகின்றார்.

ஜெபம்:

அன்பின் பரம பிதாவே, உம்முடைய சிட்சையை அற்பமாக எண்ணாமல், உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து மனந்திரும்பத்தக்கதாக என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 15:2

Category Tags: