புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 27, 2019)

இருதயத்தைக் காத்துக் கொள்ளும்

சங்கீதம் 19:13

துணிகரமான பாவங்க ளுக்கு உமது அடியேனை விலக்கிக்காரும், அவை கள் என்னை ஆண்டு கொள்ள ஒட்டாதிரும்; அப் பொழுது நான் உத்த மனாகி, பெரும்பாதகத்து க்கு நீங்கலாயிருப்பேன்.


சக்கரை வியாதியின் அறிகுறிகள் தென்படுகின்றது, இப்போது வைத் தியரிடம் போனால், எனக்கு விருப்பமான எத்தனையோ உணவு வகை களை உண்ண வேண்டாம் என்று கூறிவிடுவார். சற்று உடற்பயிற்சி செய்வோம். கை வைத்தியங்களை பார்ப்போம் என்றும் தங்கள் உண்மை நிலையை வைத்தியர் கூறிவிடுவார் என்ற பயத்தினாலும், வைத்தியரை சந்திப்பதற்கு காலதாமதம் செய்பவர் கள் பலர் இருக்கின்றார்கள். நோயின் அறிகுறி தென்படும் போது, அதை முழுமையாக சோதனை செய்து, மரு த்துவ ஆலோசனைகளைப் பெற்று, தகு ந்த காலத்தில் வைத்தியம் செய்ய வேண்டும் என்ற உணர்வு அற்றவர்க ளாக, நோய் நன்றாக அவர்களை பிடி த்துக் கொள்ளும்வரை தங்கள் இ~;ட ப்படி அநேகர் வாழ்கின்றார்கள். அதா வது, ஆரோக்கியமான வாழ்விற்குரிய ஆலோசனைகளையும், வைத்திய முறைமைகளையும் தேவையான நேர ங்களிலே பெற்றுக் கொள்வதற்கு பதி லாக சாட்டுப் போக்குகளை கூறிவிடுகின்றார்கள். இது சில மனிதர்க ளுடைய மதியீனம். இவ்வண்ணமாகவே எங்கள் உள்ளான மனிதனில் ஏற்படும் நோயின் அறிகுறிகளைக் குறித்தும், நோய்களைக் குறித்தும் பலர் உணர்வற்றவர்களாக இருந்து விடுகின்றார்கள். சிலருடைய வாழ் க்கையிலே வன்மம், பகை, முரண்பாடுகள் ஏற்;படும்போது, வேத த்தை வாசித்தால் அதன்படி நான் கீழ்ப்படிந்து, விட்டுக்கொடுத்து ஒப் புரவாக வேண்டும். தேவ செய்திக்கு செவிகொடுத்தால் நான் நினை த்தபடி காரியங்களை செய்ய முடியாது. தேவ ஆலோசனையை முறை ப்படி கூறுபவர்களிடம் பேசினால், என் மனத்திருப்தியடையும்படி இரண்டு வார்த்தைகள் பேச முடியாது என்று, தங்கள் மாம்ச இச்சை கள் நிறை வேறும்வகையில், தேவனுடைய வார்த்தைகளை தங் கள் இருதயங்களை விட்டு அப்புறப்படுத்தி விடுகின்றார்கள். இப்படியான துணிகரமான பாவங்களுக்கு நாங்கள் உட்படாமல், பெரும் பாதகத்தி ற்கு தப்பிக் கொள்ளும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து எங்க ளைக் காத்துக் கொள்ளும்படிக்கு தேவனை வேண்டிக் கொள்வோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, எந்த சூழ்நிலையிலும், நான் உமக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்யாதபடிக்கு, உமது வாக்கை என்னிருதயத்தில் எப்போதும் வைத்திருக்கும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 119:10-11