புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 23, 2019)

கர்த்தருடைய சாட்சிகளின் வழி

சங்கீதம் 119:2

அவருடைய சாட்சிகளைக் கைக்கொண்டு, அவரை முழு இருதயத்தோடும் தேடுகிறவர்கள் பாக்கியவான்கள்.


இயேசு சொன்னார்: என்னைக்குறித்து நானே சாட்சிகொடுத்தாலும், என் சாட்சி உண்மையாயிருக்கிறது. ஏனெனில் நான் எங்கேயிருந்து வந்தேனென்றும், எங்கே போகிறேனென்றும் அறிந்திருக்கிறேன். என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடு க்கிறார்;. (யோவான் 8:14, 5:37,39) தேவனுடைய சாட்சிகளின் வழியில் நடப்பது என்பதன் பொருள் என்ன? தேவன், தாம் யார் என்பதைக் குறி த்து வெளிப்படுத்திக் கூறியிருக்கும் வேத வாக்கியங்களே அவருடைய சாட்சிகளாக இருக்கின்றது. அந்த சாட் சிகள் சத்தியமுள்ளது. அவை எங் களுக்கு நித்திய வாழ்வடையும் வழி யை காண்பிக்கும் கட்டளைகளாகவும், வாக்குத்தத்தங்களாகவும் இருக்கின்றது. எடுத்துக் காட்டாக “நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில்வரான்.” “நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசித்தால், அவன் இர ட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான்.” “இருக்கிறவரும் இருந்தவரும் வருகிறவருமா கிய சர்வவல்ல மையுள்ள கர்த்தர்: நான் அல்பாவும், ஓமெகாவும் ஆதியும் அந்தமுமாயிருக்கிறேன்” இவைகள் யாவும் தேவனாகிய கர்த்தர் தம்மைக் குறித்து கூறும் சத்தியமுள்ள சாட்சிகளாக இருக்கி ன்றது. மேலும் இயேசு கூறுகையில் “வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவை களே”. என்றார். வேதவாக்கியங்களை ஆராய்ந்து பார்த்து, அதன் வழியிலே நடந்த தேவ மனு~ர்கள் அந்த சாட்சிகளின் வழி யில் மனத்திருப்த்தி அடைந்தார்கள். “திரளான செல்வத்தில் களிகூருவது போல, நான் உமது சாட்சிகளின் வழியில் களிகூருகிறேன்.” என்று சங்கீதக்காரன் பாடினார். ஏனெனில் திரளான செல்வத்தினால் அடைய முடியாத நித்திய ஜீவனை அவருடைய சாட்சிகளின் வழியிலே நாங்கள் கண்டடைகின்றோம். எனவே அவருடைய சாட்சிக ளைக் கைக்கொண்டு, எங்கள் முழு இருதயத்தோடும் அவரைத் தேடுவோம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, நீர் கட்டளையிட்ட சாட்சிகள் நீதியும், மகா உண்மையுமானவைகள். அவைகளை என் முழு இருதயத்தோடும் கைக்கொண்டு நடக்க எனக்கு கிருபை செய்வீராக இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 5:37-39