புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 21, 2019)

நற்சாட்சிகளாயிருப்போம்

மத்தேயு 5:37

உள்ளதை உள்ளதென் றும், இல்லாததை இல்லாததென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்.


ஒரு மனிதன் குறிப்பிட்ட ஒரு கம்பனியிலே வேலையை பெறும்படி யாக, நேர்முகத்தேர்வுக்கு சென்றிருந்தான். இரண்டு நேர்முகத்தேர் வுகளிலும் சித்தியடைந்ததால் இப்போது அவனைக் குறித்து, காரி யங்களை உறுதிப்படுத்தும்படி இரண்டு சாட்சிகளை தரும்படி அங் கிருந்த முகாமையாளர் கேட்டிருந்தார். அந்த மனிதனும் இரண்டு சாட் சிகளின் பெயர்களை அந்த முகாமை யாளரிடம் கொடுத்தான். அந்த சாட்சி களில் ஒருவர், இந்த மனிதனுக்கு உதவி செய்யும்படிக்கு, “உன்னைப் பற்றி எப்படியாக நான் கூற வேண் டும்” என்று கேட்டார். அந்த மனித னுக்கு வேலை நிச்சயமாக தேவை யாக இருந்தது. எனினும், “ஐயா, உங்களிடம் அவர்கள் கேட்கும் கேள் விகளுக்கு நீங்கள் என்னைப் பற்றி அறிந்ததை உள்ளபடியே சொல்லு ங்கள்” என்று பணிவுடன் கூறினார். ஏனெனில் அந்த மனிதன் தன்னிடத்தில் இல்லாததொன்றை தனக்கு சாட்சி பகருகின்றவர்கள் கூறுவதை விரும்பவில்லை. ஒருவருடைய வாழ்வில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை அல்லது அவர்கள் அறிந்த ஒரு சம்பவத்தை, உள்ளதை உள்ளபடி கூறுவதை சாட்சி என்று வர்ணிக்கப்படுகின்றது. நடைபெற்ற சம்பவத்தோடு இன்னும் சில காரியங்களை சேர்த்து மிகைப்படுத்து வதும் அல்லது அந்த சம்பவத்தின் கருப்பொருளை மாற்றும்படி நட ந்த சம்பவத்திலுள்ள சில காரியங்களை மறைத்து வைப்பதும் உண்மை யான சாட்சியல்ல. எங்களுடைய வாழ்க்கையிலே நாங்கள் யாரை குறித்த சாட்சிகளை கூறுகின்றோம்? நாங்கள் மற்றவர்களைக் குறித்து சாட்சி கூறுகின்றோம். தேவனைக் குறித்து சாட்சி கூறுகின்றோம். அது மட்டுமல்ல எங்களைக் குறித்தும் நாங்கள் சாட்சிகள் கூறுகின்றோம். அவை யாவும் தேவன் முன்னிலையில் நற்சாட்சியாக (கூறுவதில் உண்மை) இருக்க வேண்டும். நற்சாட்சியாய் இல்லாத யாவும் பொய் சாட்சியாகவும் அது தீமையினால் உண்டானதாயுமிருக்கும். எனவே நாங்கள் ஒருவருக்கு சாட்சியாக இருக்கும்படி சம்மதம் தெரிவித்தால், முகத்தாட்சண்யம் செய்யாதடிக்கு எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவன் பொய்ச்சாட்சியை வெறுக்கின்றார். ஆதலால், உள்ளதை உள்ள தென்றும் இல்லாததை இல்லாததென்றும் கூறுவோம்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, நீர் பொய்களில் பிரியப்படுகின்றவர் அல்லர். நான் எப்போதும் உண்மையைப் பேசும் சாட்சியாக இருக்கும் படிக்கு என்னை பெலப்படுத்தி வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாத்திராகமம் 20:16