புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 20, 2019)

ஆவிக்கேற்றபடி நடவுங்கள்

கலாத்தியர் 5:16

ஆவிக்கேற்றபடி நடந்து கொள்ளுங்கள், அப்பொழுது மாம்ச இச்சையை நிறைவேற்றாதிருப்பீர் கள்.


ஒரு ஊரிலே வசிக்கும் இரு அயல்வாசிகளுக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடானது பெரும் வாக்குவாதத்தை கிளப்பிவிட்டது. தேவனை அறிந்த இருவரும் போதகர் முன்னிலையிலும், சபையோர் மற்றும் அயலவர் முன்னிலையில் தங்களை நீதிமான்களென்று நிரூபிப்பத ற்காக சாட்சிகளை தேடுவதில் அதிக நேரத்தை செலவிட்டார்கள். அன்று மாலையிலே, இருவருடைய வீட்டிலும் அவர்களுக்கு ஆதரவாக சிறு சிறு குழுக்கள் சேர்ந்து விட்டது. நடந்த சம்பவத்தைக் குறித்து நடு இரவுவரை க்கும் அவரவர் வீடுகளிலே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆதரவளிக்க வந் தவர்களும், ஆண்டுகளுக்கு முன் நட ந்து முடிந்த கசப்பான சம்பவங்களை யும் உயிரடையச் செய்து, அவைக ளைக் குறித்தும் பேசினார்கள். அந்நாட் களிலோ வேதப்புத்தகம் அவர்கள் வாழ்க்கையில் மூடப்பட்டாயிற்று. ஜெப நேரம் இரத்துச் செய்யப்பட்டாயிற்று. இந்த உலகிலே மனித ர்கள், நீதிமன்ற வழக்கிற்கு தங்களை ஆயத்தப்படுத்துவதுபோல இரு வரும் தங்களுக்கென ஒரு கதையும், அந்த கதைக்கு சாட்சிகளையும் ஏற்படுத்துவதிலேயே அதிக நேரத்தை செலவிட்டார்கள். சில நாட்களு க்கு பின்பு, இந்தச் சம்பவம் போதகருடைய செவிகளிலே எட்டியது. போதகர், அவர்கள் இருவரையும் அழைத்துப் பேசினார். இருவரும் தங்கள் தங்கள் ஆதங்கங்களைக் கொட்டினார்கள். கர்த்தரும் எங்க ளோடு இருக்கின்றார் என்றும் கூறினார்கள். போதகரோ அவர்களை நோக்கி: பிள்ளைகளே, உங்கள் வாழ்க்கையிலே சாட்சிகளை தேடும் நேரம் இது அல்ல. இது இயேசுவை தேடும் நேரம். நீங்கள் உங்கள் இச்சைகளின்படி சண்டைகளைச் செய்துவிட்டு, உங்கள் பிரிவினைக்குள் கர்த்தரையும் சேர்த்துக் கொள்வது என்ன? நீங்கள் தேவன் தங்கும் ஆலயமாக இருந்தால், உங்களிடமிருந்து வரவேண்டிய வேத வசனங் களின் சத்தம் எங்கே? உங்களில் ஒலிக்க வேண்டிய துதிபலி சத்தம் எங் கே? உங்களிடம் இருந்தோ யுத்தத்தின்; இரைச்சல் அல்லவா ஒலிக்கி ன்றது” என்று கூறினார். போராட்டத்தின் நாட்களிலே, தேவன் கொடுத்த வல்லமையான ஆயுதங்களை விட்டுவிடாதிருங்கள். மாம்சத்தின் இச்சை களை மேற்கொள்ளும்படி வேதத்தை வாசியுங்கள், கருத்தோடு ஜெபியுங் கள், தேவ ஆலோசனைக்குக் கீழ்ப்படியுங்கள் என்று அறிவுரை கூறினார்.

ஜெபம்:

சமாதானத்தின் தேவனே, ஒருவரை ஒருவர் பட்சித்து அழிந்து போகாமல், உம்முடைய வசனத்தின் சத்தமும், துதியின் ஜெயத்தொனியும் எப்போதும் என்னில் இருக்கும்படிக்கு என்னை பெலப்படுத்தி நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 கொரி 6:19-20