புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 19, 2019)

தயவைக் காண்பியுங்கள்

எபேசியர் 4:32

ஒருவருக்கொருவர் தய வாயும் மனஉருக்கமா யும் இருந்து, கிறிஸ்து வுக்குள் தேவன் உங்களு க்கு மன்னித்தது போல, நீங்களும் ஒருவருக்கொ ருவர் மன்னியுங்கள்.


எத்தனை வருடங்களாக நண்பர்களாக இருந்தோம். எத்தனை நன் மைகளை என்னிடத்தில் பெற்றுக் கொண்டான் ஆனால் இன்று என க்கு துரோகம் செய்து விட்டான் என்று தன்னுடைய நண்பனைக் குறித்து பல நாட்களாக ஒரு மனிதன் மிகவும் குழப்படைந்திருந்தான். இப்படியாக இருக்கின்ற வேளையிலே, ஒரு நாள் இரவு ஆகாரத்தை உண்ணும் போது, அன்றைய ஆகாரத் திலே உப்பு மிகவும் அதிகமாக இரு ந்ததால், கோபமடைந்து தன் மனை வியை மிகவும் கசந்து கொண்டான். தன் கணவரின் மனநிலையை உணர் ந்த மனைவியோ மௌனமாக இருந் தாள். ஆனால் அவர்களுடைய மூத்த மகள் தயவுடன் தந்தையாரை நோக்கி: “அப்பா இத்தனை வருடங்களாக அம்மா எத்தனை சுவையுள்ள ஆகாரத்தை சமைத்துத் தந்தார், ஆனால் இன் றைய ஆகாரமானது சற்று பிழைத்து விட்டதற்காக ஏன் இப்படி அம்மாவை கடிந்து கொள்கின்றீர்கள்” எனக் கூறினாள். இருளிலே திடீரென வெளி ச்சம் உதித்தது போல, அக்கணமே அம்மனிதனின் மனக் கண்கள் திற க்கப்பட்டது. “இத்தனை காலமாக என்னுடைய நண்பன் எனக்கும் எத் தனையோ உதவிகளை செய்தான். உயர்விலும் தாழ்விலும் என்னோடு கூட நடந்தான், ஆனால் இந்த ஒரு தடவை அறிந்தோ அறியாமலோ செய்த தவறினாலே நான் இத்தனை வருடங்களாக இருந்த நட்பை தூக்கி எறிந்து விட்டேனே என மனம்வருந்தினான். அடுத்த நாளே, தன் நண்பனோடு ஒப்புரவாகிக் கொண்டான். முன்பு இருந்ததைவிட அவர்களது நட்பு இப்போது இன்னுமொரு படி பெலனுள்ளாதாக மாறிவிட்டது. பிரியமானவர்களே, அன்பு என்றால் என்ன? நட்பு என்றால் என்ன? நன்மைக்கு மாத்திரம் நன்மை செய்வது அன்பு என்று கூறலாமா? செய்த தவறினால் நண்பன் இக்கட்டான சூழ்நிலை யில் இருக்கும் போது, அவனைத் தள்ளிவிடுவது நட்பாகுமா? அப்படி இருக்கலாகாது. தன்னைப் போல மாறுகின்றவர்களை பிதாவாகிய தேவன் விரும்புகின்றார். தயவாய் மன்னியுங்கள் அப்போது பிசாசா னவன் வெட்கமடைந்து தோற்றுப் போவான். உங்கள் பரம பிதா உங்களைக் குறித்து மிகவும் மகிழ்ச்சியடைவார்.

ஜெபம்:

தயவுள்ள தேவனே, பூரணசற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொண்டு, மற்றவர்களுடைய குற்றங்களை தயவாய் மன்னிக் கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து வழிநடத்துவீராக. இரட் சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - கொலோ 3:13