புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 18, 2019)

சிலுவையைப்பற்றிய உபதேசம்

1 கொரிந்தியர் 1:18

சிலுவையைப்பற்றிய உபதேசம் கெட்டுப்போகி றவர்களுக்குப் பைத்திய மாயிருக்கிறதுஇ இரட்சிக் கப்படுகிற நமக்கோ அது தேவ பெலனாயிருக்கி றது.


முன்னே பாவத்தினாலே மரித்துப் போய் தேவனைவிட்டு தூரமாயிருந் தோம். பரலோகத்திற்கு செல்ல முடியாதபடிக்கு எங்களுக்கும் பர லோகத்திற்கும் இடையிலே பெரிதான பிரிவினையாகிய நடுச்சுவர் இருந்தது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தாமே, எங்கள் பாவங் களை தம்மேல் ஏற்றுக் கொண்டு, தம்மைத் தாமே பலியாக ஒப்புக் கொடுத்தார். அவர் சிலுவையிலே சிந் திய இரத்தத்தினாலே பரம பிதா வோடு எங்களை ஒப்புரவாக்கி சமாதா னத்தை உண்டுபண்ணினார். பகையாக நின்ற பிரிவினையாகிய நடுச்சுவரைத் தகர்த்து, பரலோகம் செல்லும் புதிய ஜீவ மார்க்கத்தை உண்டு பண்ணி னார். மீட்ப்பின் ஒளியானது தங்களு டைய வாழ்க்கையில் வந்திருந்தும் தங் கள் இருதயத்தை கடினப்படுத்தி, தங் களது ஆத்துமாவை கேட்டுக்கு ஒப்புக் கொடுகின்றவர்களுக்கு, சிலுவையைப் பற்றிய இந்த உபதேசம் பைத்தியமாக தோன்றுகின்றது. எனவே, இதைப் பின்பற்றுகின்ற எங்களை பைத் தியம் என்றும், தங்களை இந்த உலகத்தின் ஞானிகள் என்றும் எண் ணிக் கொள்கின்றார்கள். அவர்கள் உலகத்தின் ஞானிகள் என்பது உண்மை. ஆனால், அவர்களது உலக ஞானத்தினால் நித்திய வாழ்வின் வழியை அவர்களால் உணரமுடியாமல் இருக்கின்றது. ஆனால் அவர் களுக்கு பைத்தியமாக தோன்றுகின்றவை, எமக்குத் தேவ தயவினா லே அருளப்பட்ட தெய்வீக ஞானத்தினால், எங்கள் மனக்கண்கள் திற க்கப்பட்டதினாலே சிலுவையை பற்றிய உபதேசம் எங்களுக்கு பெல மு ள்ளதாயிருக்கின்றது. எங்கள் பெலவீன நேரங்களிலே சிலுவையின் நிழ லிலே நாங்கள் பெலனடைகின்றோம். உலகத்தினாலான பெரிதானதா ய்க கனப்படுத்தப்படும் சுயஞானத்தினாலே தேவனை அவர்கள் அறி யமுடியாதிருக்கையில், அவர்களுக்கு பைத்தியமாக தோன்றும் சிலுவை யின் உபதேசத்தினாலே விசுவாசிகளை இரட்சிக்க தேவனுக்குப் பிரிய மாயிற்று. எனவே உலகத்தார் உங்களை பார்த்து பரிகாசம் பண்ணும் போது, அவர்கள் நாங்கள் பெற்றுக் கொண்ட தெய்வீக ஞானத்தை அவர்களும் பெறும்படியாக அவர்களுக்காக வேண்டுதல் செய்வோம்.

ஜெபம்:

அன்பின் தேவனே, இந்த உலகத்தின் ஞானிகளின் அறிவுக்கெ ட்டாத உண்மையை நாங்கள் அறியத்தக்கதாக எமக்கு கிருபை செய்தீர். அந்த உண்மையின் வழியிலே வாழ எம்மை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 3:19-20