புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 17, 2019)

வேதம் குறைவற்றது

சங்கீதம் 19:7

கர்த்தருடைய வேதம் குறைவற்றதும், ஆத்துமாவை உயிர்ப்பிக்கிறது மாயிருக்கிறது.


தேவனுக்கு பிரியமான கிறிஸ்தவ வாழ்க்கை வாழ்வதற்கு இன்னும் ஆதாரங்களை தேடுகின்றீர்களா? தேவனாகிய கர்த்தர் தாமே, மனிதனை தன்னுடைய சாயலில் உருவாக்கினார் என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. இது தேவனுடைய வார்த்தை. இதற்கு விரோதமாக தங்களை உலகத்தின் ஞானிகள் என்று கூறுபவர்களில் ஒருவர், மனிதன் குரங்கிலிருந்து கூர்ப்படைந்தான் என்னும் கோட்பாட்டை ஏற் படுத்தினார்;. இது தேவனுடைய வார்த் தைக்கு விரோதமான கூற்று. “தேவன் நோவாவை பேழைக்குள் வைத்து காத்துக் கொண்டார.;” இது சத்திய வேதம் கூறும் உண்மை. இதை நம்பு வதற்கு நாங்கள் இன்னும் ஆதாரங் களை தேடினால், நாங்கள் தேவனு டைய வார்த்தையை அசட்டை செய்கி ன்றவர்களாக இருப்போம். நாம் தரிசித்து நடவாமல், விசுவாசித்து நடக்கிறோம். கர்த்தருடைய வேதம் குறைவற்றது! வானமும் பூமியும் ஒழிந்துபோம், தேவனுடைய வார்த்தைகளோ ஒழிந்துபோவதில்லை. எனவே தேவன் விளம்பிய வேதத்தை உறுதிப் படுத்துவதற்கோ அல் லது மெருகூற்றுவதற்கோ மனிதனுடைய எந்த உலக ஞானமும் அற்ப மானது. மனிதனுடைய வாழ்நாட்கள் கர்த்தருடைய கரத்திலிருக்கி ன்றது. “ஒருவரும் கெட்டுப்போகாமல்” அதாவது, தேவன் இல்லை என்று சாதிக்கின்றவர்களும், உலக ஞானத்தை நம்பி வாழ்கின்ற வர்களும், துன்மார்க்கரும், சன்மார்க்கரும், பாவிகளும், உண்மையான தேவன் யார் என்று அறியாமல் வாழ்பவர்களும் இரட்சிப்படைய வேண்டும் என்பதற்காகவே, யாவர்மேலும் நீடிய பொறுமையுள்ளவராக இருக்கின்றார். ஆனால் சில மனிதர்களோ, தேவனுடைய நீடிய பொறு மையை அசட்டை செய்து, தற்போதுள்ள கிருபையின் காலத்திலே, தேவனுக்கு விரோதமான வார்த்தைகளை பேசுகின்றார்கள். இன்னும் பலரை தங்கள் வழியில் இழுத்துக் கொள்கின்றார்கள். பிரியமானவர் களே, மறுபடியும் தேவனை விசுவாசிப்பதற்கு உலக ஞானத்தையும், அடையாளங்களையும், ஆதாரங்களையும் நாடித் தேடாமல் தேவன் எங்களுக்கு கிருபையாய் கொடுத்த வாழ்நாட்களை, வீணாக்காதபடி க்கு, வேத வார்த்தைகளை ஏற்றுக் கொண்ட நாங்கள், அந்த வார்த் தைகளை விசுவாசித்து நடக்கக்கடவோம். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை எங்கள் வாழ்வில் நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்முடைய கிருபையினாலே எங்களுக்கு இரட்சிப்பைத் தந்தீர். இனிமேல் ஆதாரங்களையும் அடையாளங்களையும் தேடாமல், உம் வார்த்தையை விசுவாசித்து நடக்க என்னை பெலப்படு த்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 55:11