புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 16, 2019)

தேவனால் உண்டான இரட்சிப்பு

எபேசியர் 2:8

கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு.


இயேசு இந்த உலகத்திலே வாழ்ந்த நாட்களிலே அநேக பிணியாளி களும், பாவிகளும், அசுத்த ஆவிகள் உள்ளவர்களும் அவரிடத்திலே வந்தார்கள். அவர் பிணியாளிகளை சுகப்படுத்தினார். பாவிகளை மன்னி த்தார். அசுத்த ஆவி பிடித்தவர்களை விடுதலையாக்கினார். இவர்கள் தங்கள் வாழ்க்கையில் ஒருபோதும் கண்டிராத அதிசயங்களையும் அற்புதங்களையும் கண்டார்கள். அந்த அற்புதங்கள் வழியாக அநேகர் அவரி டத்தில் விசுவாசம் வைத்தார்கள். அதா வது, அவருடைய வார்த்தையை மன தார ஏற்றுக் கொண்டு, அவருடைய கற் பனைகளை தங்கள் வாழ்வில் கைக் கொள்ளும்படி தங்களை அர்ப்பணித்தா ர்கள். ஆனாலும் அங்கிருந்தவர்களில் பலர் அவர் எப்படிப்பட்ட அற்புதங்க ளைச் செய்தாலும், தங்கள் இருதய ங்களை கடினப்படுத்திக் கொண்டா ர்கள். அந்த நாட்களில் மட்டுமல்ல, இன்றும் இயேசு தம்முடைய ஊழி யர்கள் வழியாக அற்புதங்களைச் செய்கின்றார். அதன் வழியாக பலர் இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் விஞ்ஞானமே மெய்ஞானம் என்று கூறும் மனிதர்களும் அடங்குவார்கள். தேவன் இல்லை என்று வாழ்ந்த இவர்கள், தங்கள் ஆராய்ச்சிகள் வழியாக, வேதத்திலே கூறப்பட்டவைகளுக்கு ஆதாரங் களை கண்டு பிடித்ததால், அவர்களது கண்கள் திறக்கப்பட்டு, தேவன் மேல் விசுவாசம் கொண்டிருக்கின்றார்கள். இந்த செயல் அவர்களின் வாழ்வில், தேவன்மேல் விசுவாசத்தை உண்டுபண்ணும் ஒரு திருப்பு முனையாக இருந்தது. எந்த ஆதாரமோ, அவர்கள் கண்ட எந்த அற்பு தங்களோ அவர்களை இரட்சிக்கவில்லை, தேவனுடைய கிருபையி னாலே உண்டான அற்புதங்கள் ஆதாரங்கள் வழியாகவே அவர்கள் இரு தயத்திலே விசுவாசம் உருவாக்கப்பட்டது. ஒருவரும் பெருமைபாரா ட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல. அப்படியாக தேவன் மேல் உண்மையான விசுவாசம் வைத்தவர்கள் மேற்கொண்டு தேவனை விசுவாசிப்பதற்கு இன்னும் ஆதாரங்களை தேடமாட்டார்கள். அவர்கள், விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயே சுவை நோக்கி, அவர்களுக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமை யோடே ஓடுவார்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, நீரே விசுவாசத்தை தொடக்குகின்றவரும் அதை எங்களில் நிறைவேற்றி முடிக்கின்றவருமாயிருக்கின்றீர் என்ற உண்மையை உணர்ந்து உம்மை சார்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 12:1