புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 15, 2019)

வாழ்வு தரும் வழி

மத்தேயு 7:14

ஜீவனுக்குப் போகிற வாசல் இடுக்கமும், வழி நெருக்கமுமாயிருக்கிறது; அதைக் கண்டுபிடிக்கிறவர்கள் சிலர்.


இன்று விஞ்ஞானிகள் மட்டுமல்ல, இந்த உலகிலே வாழும் மனிதர்கள் யாவரும் பல காரியங்களை கண்டுபிடிக்கும்படி பிரயாசப்படுகின்றா ர்கள். பலர் பிழைப்புக்கு புதிய வழிகளை தேடுகின்றார்கள். இன்னும் பலர் உல்லாசமாக வாழ்வதற்குரிய பல கொள்கைகளை தங்களு க்கென வகுத்து, அதற்கேற்ற சுற்றாட லைத் தேடுகின்றார்கள். வேறு பலர் நான் கற்க வேண்டும் அறிவடைய வேண்டும் என்று கடுமையாகப் பிரயா சப் படுகின்றார்கள். இவைகளினாலே ஏதோ ஒரு காரியம் தங்களுக்கு கிடை க்குமெனவும், அதனால் மனத்திருப்தி உண்டாகும் எனவும் எண்ணிக் கொள் கின்றார்கள். எங்களுடைய தேவை என்ன என்பதை பரம பிதா அறிந்தி ருக்கின்றார். மனிதனுக்கு செம்மையாக தோன்றும் வழிகள் உண்டு. அவன் அந்த வழிகளிலே சென்று பலவிதமான காரியங்களை கண்டு பிடிக்கலாம். அவை பொருட்களாகவோ, கோட்பாடுகளாகவோ, தத்து வங்களாகவோ, வாழ்க்கை முறைகளாகவோ இருக்கலாம். ஒரு மனி தன் தன் வாழ்விற்கு செய்யக் கூடிய மகா பெரிதான கேடு விளை விக்கும் கண்டுபிடிப்பு என்ன? தேவன் இல்லையென்று கூறி, வேத பிரமாணங்களுக்கு எதிரான கொள்கைகளை, தத்துவங்களை, கோட் பாடுகளை கூறிக் கொள்வதே, அவன் தன் ஆத்துமாவிற்கு எதிராக கண்டுபிடித்த பெரிதான தீமையாக இருக்கின்றது. கேட்டுக்குப் போகிற வாசல் விரிவும், வழி விசாலமுமாயிருக்கிறது; அதின் வழி யாய்ப் பிரவேசிக்கிறவர்கள் அநேகர். அது பார்வைக்கு இன்பமும், புத்தியை தெளிவிக்கின்றதும் போல இருக்கும். ஆனால் அதன் முடிவில் நித்தியமான அழிவு உண்டு. ஒரு மனிதன் தன் வாழ்விற்கு செய்யக் கூடிய மகா பெரிதான நன்மையை உண்டுபண்ணும் கண்டு பிடிப்பு என்ன? முடிவில்லாத வாழ்வைத் தரும் வழியை கண்டுபிடி ப்பதே அவன் தன் ஆத்துமாவிற்கு செய்யக்கூடிய மகா பெரிதான கண்டுபிடிப்பு. நானே வாசல், என் வழியாய் ஒருவன் உட்பிரவேசி த்தால், அவன் இரட்சிக்கப்படுவான், அவன் உள்ளும் புறம்பும்சென்று, மேய்ச்சலைக் கண்டடைவான் என்று இயேசு கூறியிருக்கின்றார். அந்த வாசலை கண்டு பிடித்து, அதன் வழியாய் பிரவேசிப்பனே, ஆன்மீக திருப்தியைக் கண்டடைவான்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, வாழ்வு தரும் வழியாகிய இயேசு கிறி ஸ்துவை நான் கண்டடையும்படி நீர் செய்த மகா பெரிதான உம்முடைய கிருபைக்காக நன்றி. அந்த வழியிலே வெற்றி வாழ்க்கை வாழ என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:9