புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 12, 2019)

தேவ ஊழியன் யார்?

1 கொரிந்தியர் 2:5

என் பேச்சும் என் பிரசங்கமும் மனுஷ ஞானத்திற்குரிய நயவசனமுள்ள தாயிராமல், ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது.


ஒரு சமயம், ஆலய வாசலிலே சப்பாணியாக இருந்த மனிதன் ஒரு வனை, பேதுருவும் யோவானும், இயேசுவின் நாமத்தினாலே குணப்படு த்தியபடியால், யூத மதத் தலைவர்கள் அவர்களைப் பிடித்து, ஆலோனை சங் கத்திற்கு முன்பாக நிறுத்தி அவர் களை விசாரணை செய்தார்கள். அந்த வேளையிலே பேதுருவும் யோவா னும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு, அவர்கள் படிப்பறியாதவர்களெ ன்றும் பேதமையுள்ளவர்களென்றும் அறி ந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர் கள் இயேசுவுடனே கூட இருந்தவர்க ளென்றும் அறிந்து கொண்டார்கள். அவ ர்கள் இயேசுவோடு கூடவே இருந்த நாட்களில், இயேசுவின் வருகையின் மறைபொருளை அறியாதவர்களாயும், தேவனுடைய ராஜ்யம் எப்படி ப்பட்டதென்பதை உணராதவர்களாயுமிருந்தார்கள். ஆனால், வாக்க ளிக்கப்பட்ட பரிசுத்த ஆவியின் அபிN~கத்தைப் பெற்றபின்பு இந்த உலகத்தின் கல்விமான்கள் கண்டு, அதிசயிக்கதக்கவிதமாக அவர்கள் பேச்சு கருத்துள்ளதாகவும் வல்லமை நிறைந்ததாகவும் இருந்தது. பிற் பாடு, பவுல் என்னும் மனிதனை கர்த்தர் தன் பணிக்காக ஏற்படுத்தி னார். பவுல் என்னும் மனிதனோ யூதர்களின் வேதப் பிரமாணங்களை முறைப்படி கற்று பாண்டித்தியம் பெற்றவர். ஆனால் இயேசுவின் வார் த்தைக்குக் கீழ்ப்படிந்து, தன்னை ஒப்புக் கொடுத்து, பரிசுத்த ஆவி யின் அபிN~கத்தை பெற முன்பு, அவருடைய ஆவிக்குரிய கண்க ளோ குருடாக இருந்தது. இயேசு யார் என்பதைக் குறித்து அறிவதற்கு அவருடைய கல்வி அவருக்கு உதவி செய்யவில்லை. “என் பேச்சும் என் பிரசங்கமும் மனு~ஞானத்திற்குரிய நயவசனமுள்ளதாயிராமல், தேவ ஆவியினாலும் பெலத்தினாலும் உறுதிப்படுத்தப்பட்டதாயிருந்தது என்று அப்போஸ்தலராகிய பவுல் கூறியிருக்கின்றார்.இந்த உலகத்தின் ஒழுங்கின்படி நாங்கள் கல்வி கற்றிருக்கலாம் அல்லது உலகத்திற்கு பேதமையுள்ளவர்களாக இருக்கலாம். கர்த்தர் ஒருவனை தம் பணிக் காக அபிN~கித்து நியமித்தால் வேறொருவனும் அந்த ஊழியக்கார னை எதிர்;த்து மேற்கொள்ள முடியாது. அதுபோலவே கர்த்தர் ஒருவனை நியமிக்காவிட்டால் அவன் பிரயாசம் யாவும் விருதாவாயிருக்கும்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, இந்த உலகத்தின் அளவுகோலின்படி உம்முடைய ஊழியத்தை நான் செய்யாமல், நீர் நியமித்த ஒழுங்கின் படி உம்முடைய பணியை நிறைவேற்ற எனக்கு உதவி செய்யும். இர ட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - அப்போஸ்தலர் 4:13