புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 11, 2019)

ஆவிக்குரிய மனுஷன்

1 கொரிந்தியர் 2:15

ஆவிக்குரியவன் எல்லாவற்றையும் ஆராய்ந்து நிதானிக்கிறான்;


ஒரு ஊரில் வாழ்ந்து வந்த சமுதாய அந்தஸ்துள்ள மனிதன், தேவ னுடைய வார்த்தையைக் கேட்டு அதை ஏற்றுக் கொண்டு, அவ்வூரிலு ள்ள சபை ஐக்கியம் ஒன்றிலே இணைந்து கொண்டான். அந்த சபை யிலுள்ள மனிதர் களும், அந்த மனிதனை கனத்துடன் வரவேற்ரா ர்கள். சில ஆண்டுகளுக்கு பின், அந்த சபையின் ஊழியர் வேறு இடத்திற்கு மாற்றப்பட்டதால், இன்னுமொரு ஊழியர் அந்த சபையின் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார். இதை அறிந்து கொண்ட அந்த சமு தாய அந்தஸ்துள்ள மனிதனின் முக நாடி வேறுபட்டது. இந்தப் புதிய ஊழி யன்; தெருவின் அந்தப்பகுதியிலே வறு மையிலும் தாழ்ச்சியிலும் இருந்தவன் இப்போது எங்களுக்கு தேவ நீதியை போதிக்கப் போகின்றானா? இதையெ ல்லாம் இவன் எப்போது அறிந்து கொண்டான் என்று கூறிக் கொண்டார். இதே போலவே, இயேசு இந்த உலகத்திலே இருந்த நாட்களிலே, ஆலயத்தில் இருந்தவர்கள் அவர் போதிப்பதை கேட்ட போது, இவன் தச்சனுடைய குமாரன் அல்லவா? இவன் தாய் மரியாள் என்பவள் அல்லவா? யாக்கோபு யோசே சீமோன் யூதா என்பவர்கள் இவனு க்குச் சகோதரர் அல்லவா? இவன் சகோதரிகள் எல்லாரும் நம்மிடத் தில் இருக்கிறார்கள் அல்லவா? இப்படியிருக்க, இதெல்லாம் இவனு க்கு எப்படி வந்தது? என்று சொல்லி, அவரைக் குறித்து இடறலடை ந்தார்கள். (மத்தேயு 13:54-58). பிரியமானவர்களே, ஜென்மசுபாவமான மனு~னோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்;. இந்த உலக போக்கின்படி சிந்திக்கின்றவர்கள், இந்த உலகத்திற்குரியவைகளை ஏற்றுக் கொள்கின்றார்கள். ஆனால் அவர்கள் தங்களை அறியாமலே தேவனுக்குரியவைகளை பகைக்கின்றார்கள். நாங்களோ உலகத்தின் ஆவியைப்பெறாமல், தேவனால் எங்களுக்கு அருளப்பட்டவைகளை அறியும்படிக்கு தேவனிலிருந்து புறப்படுகிற ஆவியையே பெற்றோம். எனவே தேவனுடைய சித்தம் இந்த பூமியிலே, எங்கள் சபையிலே, எங் கள் குடும்பத்திலே, எங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலே நிறைவே றுவதற்கு நாங்கள் இடறலாக இல்லாதபடிக்கு, ஆவிக்குரிய மனக் கண்களால், தேவனுக்குரியவைகளை இன்னதென்று நிதானித்து அறிந்து அவைகளின் வழி நடப்போம்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, உம்முடைய ஆவியினாலன்றி, ஒருவனும் உமது வழிகளை அறியமாட்டான், ஆதலால், உம்முடைய வழிகளை அறியும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்

மாலைத் தியானம் - யோவான் 15:18-19