புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 08, 2019)

பண்பட்ட நல்ல நிலம்

ஏசாயா 58:11

கர்த்தர் நித்தமும் உன் னை நடத்தி, மகா வற ட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திரு ப்தியாக்கி, உன் எலும்பு களை நிணமுள்ளதாக்கு வார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போ ல வும் இருப்பாய்.


எங்கள் இருதயமானது ஒரு வேளை வழியோரம் போன்ற நிலமாக இருக்கலாம், அல்லது கற்பாறையை போல கடினப்பட்டிருக்கலாம் அல் லது உலக ஆசைகளாகிய முற்;செடிகள் நிறைந்ததாக இருக்கலாம். தனது இருதயம் எப்படியாக பலனற்றுப் போய் இருந்தாலும், பலனு ள்ள நிலம்போல ஆக வேண்டும் என்ற வாஞ்சை ஒருவனுக்கு இருக் குமாயின், “தாகமுள்ளவன்மேல் தண்ணீரையும், வறண்ட நிலத்தின்மேல் ஆறுகளையும் ஊற்றுவேன்; உன் சந்த தியின்மேல் என் ஆவியையும், உன் சந்தானத்தின்மேல் என் ஆசீர்வாத த்தையும் ஊற்றுவேன். அதினால் அவ ர்கள் புல்லின் நடுவே நீர்க்கால்களின் ஓரத்திலுள்ள அலரிச்செடிகளைப்போல வளருவார்கள் (ஏசாயா 44:3-4) என்று தேவனாகிய கர்த்தர் கூறியிருக்கின் றார். பண்பட்ட நிலம் போல இரு க் கும் இருதயத்தைக் கொண்டவன் தேவ அன்பு உடையவன். அவன் தேவனை அன்பு செய்வதால் பிறரையும் அன்பு செய்வான். பிறருடைய குற்றங்களை மன்னித்து அவர்களும் தேவ அன் பினை கண்டடையும்படி, தெய்வீக ஒளி வீசும் சுடராகத் திகழ்வான். அவன் பிறர்நலம் கருதி வாழ்ந்தாலும், அவ ர்களின் உலக முறைமைகளால் தன்னை கறைப்படுத்திக் கொள்ள மாட்டான். துன்மார்க்கருடைய ஆலோசனையில் நடவாமலும், பாவிக ளுடைய வழியில் நில்லாமலும், பரியாசக்காரர் உட்காரும் இடத்தில் உட்காராமலும் இருப்பான். கர்த்தருடைய வேதத்தில் பிரிய மாயிரு ந்து, இரவும் பகலும் அவருடைய வேதம் அவன் இருதயத்தின் தியா னமாயிருக்கும். ஆதலால் ஆபத்தைக் கண்டு அஞ்சமாட்டான். சவால் களைக் கண்டு மருண்டு போகமாட்டான். ஜீவ வார்த்தைகளின் வேர் அவன் இருதயத்தில் ஆழமாய்ச் சென்றிருப்பதால், மகா வறட்சியான காலங்களிலும், (கடுமையான ஆவிக்குரிய போராட்டத்தின் நாட்கள்) தப்பாமல் தேவ சித்தத்தை செய்து முடிப்பான்;. அவனுடைய வாழ்க் கையின் பலன்களைக் கண்டு, பலரும் பரம பிதாவை மகிமைப் படுத்துவார்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தேவனே, பண்பட்ட நிலத்தில் பெரும் விளை ச்சல் உண்டாவது போல என் இருதயத்திலும் உம்முடைய வார்த்தை பலுகிப் பெருகத் தக்கதாக வழிடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 1:1-6