புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 05, 2019)

வார்த்தையில் நிலைத்திருங்கள்

யோவான் 15:7

நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களி லும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக்கொள்வ தெதுவோ அது உங்களு க்குச் செய்யப்படும்.


வானமும் பூமியும் ஒழிந்து போனாலும் தேவனுடைய வார்த்தை ஒழிந்து போவதில்லை. தேவனுடைய வார்த்தை வல்லமையுள்ளது. அவர் விளம்பிய வார்த்தைகள் நிறைவேறும். அந்த வார்த்தைகளிலே நாங்கள் நிலைத்திருந்தால் தேவன் விரும்பும் தெய்வீக கனிகள் எங்கள் வாழ்க்கையிலே பெருகும். ஏன் தேவனுடைய வார்த்தை மனிதர்களுடைய இருதயத்திலே நிலை த்திருக்க முடியாமல் இருக்கின்றது? விதையாகிய தேவனுடைய வார்த்தை நிலமாகிய மனிதர்களுடைய இருதய த்திலே விதைக்கப்படுகின்றது. சிலர் தங் கள் இருதயத்தை வழியோரம் போல வைத்திருக்கின்றார்கள். யாரும் சென்று வருவதற்கு அங்கே இடமுண்டு. எந்த காரியமும் அங்கே செல்வதற்கு இட முண்டு. யாரும் வரலாம், நிலமாகிய தங்கள் இருதயத்தை பண்படுத்தி, பாது காக்க விருப்பம் இல்லை. நாங்கள் தேவனுடைய ஆலயமாக இருக் கின்றோம் என்பதை மறந்து, தேவ நீதிக்கு விரோதமான காரியங் களில் தங்களை சம்பந்தப்படுத்திக் கொள்கின்றார்கள். தேவ ஒளிக்கு விரோதமான காரியங்களில் தங்களை ஐக்கியப்படுத்திக் கொள்கின் றார்கள். நான் விரும்பிய இடங்களுக்கு சென்று வருவேன். என் எண்ணப்படி எதையும் செய்வேன். என் கண்கள் விரும்பியதைப் பார்ப்பேன், நான் நினைப்பதை பேசுவேன். எதையும் குடிப்பேன். இப்படியாக தங்களைப் பரந்த கொள்கையுடைய கிறிஸ்தவர்கள், என்ற பிரகாரமாக வாழ்வதினால் தேவ ராஜ்யத்தின் வசனத்தைக் எத்தனை முறை கேட்டாலும் உணர்வற்ற இருதயம் உடையவர்களாக இருப்பதினால், பொல்லாங்கனாகிய பிசாசானவன் வந்து, எமது இருதயத்தில் விதைக்கப்பட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; பறித்துக் கொள்வது மட்டுமல்ல, தன்னுடைய தீவினைகளை இருதய த்திலே விதைத்து விடுகிறான். அவை வளர்ந்து பெரும் தீமையின் விருட்சமாக மாறிவிடும். அவனே வழியருகே விதைக்கப்பட்டவன். பிரி யமானவர்களே, ஏதாவது ஒரு காரியத்திலே தேவனுடைய வார்த் தையைக் கேளாமல் என்; விருப்பப்படி நான் வாழ்ந்து வருகின்றேனா என்று சற்று ஆராய்ந்து பார்த்து, தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப் படிந்து நடக்க எங்களை ஒப்புக் கொடுப்போம்.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, எந்த காரியத்தைக் குறித்தும் உணர்வற்ற வாழ்க்கை வாழாதபடிக்கு, உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்தில் வாழும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 6:14-15