புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 29, 2019)

தேவனைச் சார்ந்த வாழ்க்கை

நீதிமொழிகள் 30:9

நான் பரிபூரணம் அடை கிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல் லாதபடிக்கும்; தரித்திரப் படுகிறதினால் திருடி, என் தேவனுடைய நாம த்தை வீணிலே வழங்கா தபடிக்கும், என் படியை எனக்கு அளந்து என் னைப் போஷித்தருளும்.


குடும்பக் கஷ்டங்கள் தலை தூக்கும் போது, தங்கள் குடும்பத்தின் பொருளாதார அவல நிலைமைகளினாலே, சிலர் பல விதமான சோத னைகளில் அகப்பட்டு விடுகின்றார்கள். உள்ளதை சொல்லி உதவியை கேட்டால் மனிதர்கள் நம்ப மாட்டார்கள். எனவே பிழைப்புக்காக இல் லாததை சொல்லி தங்கள் அடிப்ப டைத் தேவைகளைச் சந்திக்கும் நிலை க்கு ஒரு சில மனிதர்கள் தள்ளப்பட்டு விடுகின்றார்கள். இந்த நிலைமை திரு ட்டுதனத்திற்கு ஒத்ததாக இருக்கின்றது. எடுத்துக்காட்டாக, ஒரு மனிதன் தான் வசிக்கும் குக்கிராமத்திலிருந்து மருத்து வ சோதனைக்காக, கர்ப்பிணியாக இரு க்கும் தன் மனைவியோடு பட்டணத்தி ற்கு சென்றார். சோதனைகள் முடிந்து திரும்பும் போது, மனைவிக்கு பசி எடுத்ததால், தங்கள் வசதிக்கேற்ப ஒரு சிறிய உணவுச் சாலையில் உணவருந் தும்படி சென்றார்கள். கணவனானவன், உணவுச் சாலையிலிருந்த உணவை பார்த்த பின்பு, சற்று தயக்கத்துடன், கடைக்காரரை நோக்கி: “ஐயா, மனை விக்கு குழந்தை கிடைக்கப் போகின்றது. கொஞ்சம் சுகவீனமாக இரு க்கின்றாள். இந்த உணவு அவள் உண்பதற்கு ஏற்றதா” என்று கேட் டான். அந்த உணவு நாட்பட்டது என்று அறிந்திருந்தும், கடையின் உரிமையாளர், தன்னுடைய நாளாந்த உழைப்பிற்காக, ஆம்! அது இன்று சமைத்த உணவு தான் என்று அதை அவர்களுக்குக் கொடு த்தார். அதை உட்கொண்டு சில மணித்தியாலங்களில் அந்த மனிதனின் மனைவி மிகவும் சுகவீனமுற்றாள். அந்தக் கடைக்காரரோ குறிப்பிட்ட நாளின் வருவாயை எப்படியாது உழைத்துவிட வேண்டும் என்பதால், உள்ளதை சொன்னால் ந~;டம் ஏற்படும் என்று பொய்யைச் சொல்லி இன்னுமொருவருடைய பணத்தை தன் வசமாக்கிக் கொண்டார். சகோ தரரே, மிகையான செல்வத்தினால் நாங்கள் விசுவாசத்தை விட்டு அகன்று போகாமலும், வறுமையினால் வஞ்சகமான காரியங்களை நாங் கள் செய்துவிடாதபடிக்கும், நாங்கள் எப்போதும் தேவனுக்கேற்ற உண ர்வுள்ள இருதயத்தை உடையவர்களாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, நெருக்கடியான நேரங்களிலும், செழிப்புள்ள காலங்களிலும் நான் உமக்கெதிராக பாவம் செய்யாதபடிக்கு உம்மையே சார்ந்து வாழும் வாழ்க்கை வாழ கிருபை செய்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 தீமோ 6:11