புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 28, 2019)

எல்லாத் தீமையின் வேர்

1 தீமோத்தேயு 6:10

பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக் கிறது. சிலர் அதை இச் சித்து, விசுவாசத்தைவி ட்டு வழுவி, அநேக வேத னைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டி ருக்கிறார்கள்.


நாளாந்த வியாபார வருவாயிலே தன் குடும்பத்தை ஒழுங்காக நடத்தி வந்த வியாபாரி ஒருவன், தேவ காரியங்களிலே பயபக்தியுள்ளவனாக இருந்து வந்தான். தினமும் காலை எழுந்து தேவனைத் துதிப்பதிலும் ஞாயிறு காலையிலே முழுக்குடும்பத்துடனும் ஆலயம் செல்வதிலும் பெரும் மகிழ்ச்சி அவனுக்கிருந்தது. இப்படியாக ஆண்டுகள் கடந்து செல்லும் போது, அவன் செய்து வந்த வியாபராம் பெரிதாய் விருத்தியடைந் தது. அவன் தாராளமாக அன்னதானம் வழங்குவதிலும், தேவ ஊழியங்களைத் தாங்குவதிலும் மிகவும் உற்சாகமாக இருந்தான். கை நிறைய பணம் இருந் ததால், தன்னுடைய பிள்ளைகளை விளையாட்டுத் துறை, இசை த்துறை பயிற்சிக்குரிய ஒழுங்குகளைச் செய் தான். அந்தத் துறைகளிலே பிள்ளை கள் ஆர்வம் காட்டினார்கள். இசை, விளையாட்டு துறையின் சில முக்கிய நிகழ்ச்சிகள் போட்டிகள், வார இறு தியில் (சனி, ஞாயிறுக் கிழமைகள்) காலையிலே நடைபெற்றது. இதனால்;, இப்போது குடும்பமாக சபை ஆராதனைகளிலே கலந்து கொள்வது இரண்டாவது இடத்திற்குத் தள் ளப்பட்டுப்போயிற்று. தந்தையார், விருத்தியடைந்த தன் வியாபாரத்தைக் கவனிப்பதற்கு நம்பிக்கையானவர்கள் இல்லாதபடியால், வியாபார அலுவல்களிலே அதிக நேரத்தை செலவிட்டார். தாயார், பிள்ளைகளு டைய பாடங்கள் மற்றும் இதர நிகழ்ச்சிகளுக்கு அவர்களை கொண்டு செல்வதில் அதிகமான நேரத்தை செலவிட்டார். இதனால் அவர்களு டைய ஆவிக்குரிய வாழ்வை குறித்த எண்ணம் குறைந்து கொண்டே போயிற்று. பிரியமானவர்களே, இந்த சம்பவத்தின் கருப்பொருளை சிந் தித்துப் பாருங்கள். உலக ஐசுவரியம் எங்கள் வாழ்க்கையை மேற்கொ ள்ளாதபடிக்கு நாங்கள் அதை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில் உலக ஐசுவரியத்தோடு, அதைச் சார்ந்த பல காரியங்களைக் குறித்த ஆசை எங்கள் உள்ளத்தை மெதுவாக பற்றிப் பிடித்துவிடும். இந்த ஆசை மனிதர்களை சோதனையிலும், கண்ணியிலும், கேட்டிலும், அழிவிலும், மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுத்திவிடும். எனவே உலக ஐசுவரியத்தை குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

என்றும் மாறாத தேவனே, போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே எப்போதும் நான் கொண்டிருக்கும்படி மனப்பிரகாசமுள்ள கண்களைத் தந்து உமது பாதையில் நடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 19:24