புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 27, 2019)

பாக்கியவான் யார்?

சங்கீதம் 128:1

கர்த்தருக்குப் பயந்து, அவர் வழிகளில் நடக்கி றவன் எவனோ, அவன் பாக்கியவான்.


உலக ஐசுவரியமும், உலக தரித்திரமும் என்ற தலைப்பு, எங்கள் மத்தியிலே அடிக்கடி பேசப்படுகின்றது. எங்கள் இரட்சகரும் கர்;த்தரு மாகிய இயேசு கிறிஸ்துவும் இதை குறித்துப் பேசியிருக்கின்றார். “ஐசு வரியமுள்ள ஒரு வாலிபன்” மற்றும் “ஏழை விதவையின் காணிக்கை” போன்றவை குறிப்பிடத்தக்கது. இதைத் தொடர்ந்து வேதத்திலுள்ள நிரூபங்களில் இந்த விடயத்தைக் குறி த்து பல இடங்களிலே குறிப்பிடப்பட்டுள் ளது. இந்த உலகத்திலே தரித்திரராக இருப்பது பரலோகம் கடந்து செல்வத ற்குரிய கடவுச் சீட்டு அல்ல. ஏனெனில், தேவனை அறியாத பல மனிதர்கள் தங் கள் வாழ்க்கையிலுள்ள எல்லாச் செல் வங்களையும் துறந்து, துறவறம் பூண்டு, காடும் வனாந்திரமுமான இடங்களுக்கு சென்றிருக்கின்றார்கள். எனவே தரித்திரம் என்ற போர்வையை மட்டும் போர்;த்துக் கொண்டு நாங்கள் பரலோகம் செல்ல முடியாது. அதே நேரத்தில் ஐசுவரியமுள்ளவர்கள் சிலர் செய்யும் தானதர்மங்களுக்கு முடி வில்லை. அதனால் அவர்கள் உலகத்திலே பலவற்றை ஆதாயப்படுத் திக் கொள்கின்றார்கள். இந்த உலகம் முழுவதையும் அவர்கள் ஆதா யப்படுத்தினாலும், தங்கள் ஆத்துமாவிற்கு நன்மையைத் தேடாவிட்டால் அதனால் அவர்களுக்கு எந்தப் பிரயோஜனமும் இல்லை. இந்த காரிய த்தின் கடைத்தொகையைப் பார்ப்போமென்றால், ஒருவன் இந்த உலக ஐசுவரியம் நிறைந்தவனாக இருந்தாலும், உலக தரித்திரம் உடைய வனாக இருந்தாலும், “இந்த உலகிலே வாழும் போது பரம பிதாவின் சித்தத்தை செய்கின்றவன் எவனோ, அவனே நித்திய ஜீவனை சுதந்த ரித்துக் கொள்ளுவான்” தரித்திரம் இருந்தும் தேவனை தூ~pக்கின்ற மனிதர்கள் இருக்கின்றார்கள். ஐசுவரியம் இருந்தும் அந்த ஐசுவரிய த்தை அழிந்து போகும், இந்த உலக ஆஸ்தி என்று அதை அற்பமாக எண்ணி, தங்கள் நம்பிக்கையை, தேவன் பேரில் வைத்திருக்கும் செல்வ ந்தர்களும் இருக்கின்றார்கள். ஆதலால், நாங்கள் எந்த நிலைமையில் இருந்தாலும் தேவனுக்குப் பயந்து அவருடைய கற்பனையின் வழி யில் வாழ்வதே சாலச் சிறந்தது. தேவனுடைய வழி உத்தமமானது. கர்த் தருடைய வசனம் புடமிடப்பட்டது. தம்மை நம்புகிற அனைவரு க்கும் அவர் கேடகமாயிருக்கிறார். அவர் வழியிலே நடக்கின்றவர்கள் நித்திய சமாதானத்தை அடைந்து கொள்கின்றார்கள்.

ஜெபம்:

பரலோக தந்தையே, இந்த உலக ஐசுவரியமோ, உலக தரித்திரமோ என்னை மேற்கொள்ளாதபடிக்கு, நான் உமக்குப் பயந்து, உம்முடைய வழியிலே வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 12:13