தியானம் (கார்த்திகை 25, 2019)
உங்களுக்கு சமாதானம்
யோவான் 14:27
சமாதானத்தை உங்களு க்கு வைத்துப்போகிறேன், என்னுடைய சமாதானத் தையே உங்களுக்குக் கொடுக்கிறேன்
இன்று பலருடைய வாழ்க்கையிலே பொருளாதாரம் பெரும் பிரச்ச னையாக இருக்கின்றது. இதனால் உணவு, உடை, உறையுள் போன்ற அடிப்படைத் தேவைகளை சந்திப்பதை குறித்து சிலர் மிகவும் கவலை யடைகின்றார்கள். எதிர்பாராத விதமாக வேலையில்லாப் பிரச்சனை, இழப்புக்கள், இயற்கை அனர்த்தத்தின் அழிவுகள் மனிதர்களுடைய வாழ் வின் நிலையை முற்றிலுமாய் மாற்றி விடுகின்றது. என்னத்தை உண்போம்? என்னத்தை அணிவோம்? என்ற ஏக்கம் அவர்களை வாட்டுகின்றது. இதனால் வாழ்க்கையில் சமாதானத்தை இழந்து விடுகின்றார்கள். ஒருவன் தன்னுடைய தேவைகளை தந்தையிடம் தெரியப்படு த்துவதில் தவறு ஏதும் இல்லை. ஆனால், தங்கள் நாளாந்த ஆகாரத்திற்காகவும், தங்கள் உடைகளுக்காகவும் உலகத்தி லுள்ள தங்கள் தகப்பனிடத்தில் பிள்ளைகள் இரந்து கேட்பார்களோ? அல்லது தன் பிள்ளை பசியாய் வாடும்படி விட்டுவிடும் தகப்பன்மார் உண்டோ? உலகத்திலே இப்படிப்பட்டவர்களை காண்பது அரிது. தீயோர் மேலும் நல்லோர் மேலும் தமது சூரியனை உதிக்கப்பண்ணி, நீதியுள்ளவர்கள் மேலும் அநீதியுள்ளவர்கள் மேலும் மழையைப் பெய் யப்பண்ணுகின்ற பரமபிதா, தம்முடைய பிள்ளைகளை மறந்து போவாரோ? உங்களில் எந்த மனு~னானாலும் தன்னிடத்தில் அப்பத்தைக்கேட்கிற தன் மகனுக்குக் கல்லைக் கொடுப்பானா? மீனைக்கேட்டால் அவனு க்குப் பாம்பைக் கொடுப்பானா? ஆகையால், பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறி ந்திருக்கும் போது, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா தம்மிடத்தில் வேண்டிக் கொள்ளுகிறவர்களுக்கு நன்மையானவைகளைக் கொடு ப்பது அதிக நிச்சயம் அல்லவா? ஆம், பரம பிதா நிச்சயம் நன்மை செய்வார். பொருளாதார பிரச்சனைகள் மட்டுமல்ல, இன்னும் பல சொல்ல முடியாத மனப்புண்கள் வேதனைகள்; மனிதர்களை வாட்டு வதால் நிர்க்கதியான நிலையில் வாழ்கின்றார்கள். என் சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்லுகின்றேன் என்று சொன்ன இயேசுவை விசு வாசியுங்கள். அவருடைய வார்த்தையை விசுவாசியுங்கள. அவர் எல்லாக் குறைவுகளையும் நிறைவாக்கி நடத்துவார்.
ஜெபம்:
சமாதானம் தரும் தேவனே, அற்ப விசுவாசியாக இராமல், நீர் ஒருபோதும் என்னை கைவிடமாட்டீர் என்ற வார்த்தையை இறுகப்பற்றிக் கொண்டு விசுவாசத்திலே நிலைத்திருக்க என்னைப் பெலப்படுத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - மத்தேயு 6:30-34