புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 24, 2019)

பிள்ளைகளின் வளர்ச்சி

1 கொரிந்தியர் 14:20

சகோதரரே, நீங்கள் புத்தி யிலே குழந்தைகளாயி ராதேயுங்கள்; துர்க்குணத் திலே குழந்தைகளாயும், புத்தியிலோ தேறினவர் களாயுமிருங்கள்.


ஒரு மனிதன் தன் வேலைக்குச் சென்று திரும்பும் போது, அவனுடைய சிறு பிள்ளைகள் நான்கு பேரும் பெரும் எதிர்பார்ப்போடு காத்திரு ப்பார்கள். ஏதாவது இனிப்புப் பண்டங்களையோ அல்லது சிறு பரிசுப்பொருப் பொருட்களை தங்கள் தந்தை கொண்டு வரும்போது, அவர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக இருக்கும். மேலும், தங்கள் தங்கள் பிறந்த தினத்தை மட்டுமல்ல, நத்தார் மற்றும் புதுவருட நாட்களை ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருப்பா ர்கள். தந்தையும் எப்படியாவது, அந் நாட்களை முன்னிட்டு, அதிக மணித்தியா லங்கள் வேலை பார்த்து, தன் பிள் ளைகள் சந்தோஷமாக இருக்க வேண் டும் என்று எப்படியாவது பரிசுப் பொரு ட்களையும் தின்பண்டங்களையும் வாங் கி வருவார். ஆண்டுள் கடந்து சென்ற தும், ஒரு நாள், அந்த மனிதனுடைய மூத்த மகனு டைய கேள்வி அவன் தந்தையின் உள்ளத்தை தொட்டது. “அப்பா, ஆண்டாண்டுகளாக இப்படியெல்லாம் எங்களுக்கு பல பொரு ட்களை வாங்கி வருகின்றீர்களே, இவற்றிற்கெல்லாம் எங்கே பண த்தை பெற்றுக் கொள்ளுகின்றீர்கள், இவையெல்லாம் உங்களுக்கு அதி கமான செலவாகுமே, ஆதலால் எனக்கு நீஙகள் கொடுத்தது போதும், இனி தம்பி தங்கைகளுக்கு மாத்திரம் கொடுங்கள் என்றான்” தந் தையின் கண்களிலே கண்ணீரும் மனதிலே பூரிப்பும் உண்டாயிற்று. ஏன் அப்படி உண்டானது? தன் பிள்ளைகளுக்கு பரிசுப் பொருட்களை கொடுப்பது தந்தைக்கு மிகவும் பிரியமானது. அவர்களுடைய கபடற்;ற குழந்தை உள்ளத்தை அவர் விரும்புகின்றார். ஆனால் எப்போதும் குழந்தைத்தனமாக பிள்ளைகள் வாழ்வதை அவர் விரும்பவில்லை. தன் மூத்த மகனின் ஆளுமையின் ஒருபடி முன்னேற்றம், அந்த மனிதனு க்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. பிரியமானவர்களே, எங்கள் பரம பிதா சம்பூரணர். அவரிடத்திலே எந்த நன்மையும் குறைவுபடுவதில்லை. அவர் எங்கள் வாழ்க்கையில் நாங்கள் அதி சிறந்ததை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதை விரும்புகின்றார். நாங்கள் எப்போதும் சிறுபி ள்ளைத் தனமாக இருக்காமல், நாங்கள் தம்முடைய திருக்குமார னாகிய இயேசு கிறிஸ்துவின் குணாதிசயங்களிலே, நாளுக்கு நாள் வளர்ந்து பெருக வேண்டும் என்பதையே அவர் விரும்புகின்றார்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, நீர் எங்கள் மேல் வைத்த அன்பினால், உம்முடைய குமாரனாகிய இயேசுவை எங்களுக்காக கொடுத்தீர். உம்முடைய சித்தப்படி நானும் அவரைப் போல மாற என்னை வழிநட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 6:1-2