புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 22, 2019)

நன்மைகளை பகிர்ந்துகொடுங்கள்

கலாத்தியர் 6:10

ஆகையால் நமக்குக் கிடைக்கும் சமயத்திற்குத்தக்கதாக, யாவருக்கும், விசேஷமாக விசுவாச குடும்பத்தார்களுக்கும், நன்மை செய்யக்கடவோம்.


தேவன் ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுத்த வாழ்நாட்களிலே, பொது வாக அவன் தன் தாய்தந்தையாருக்கு கீழ்ப்பட்டிருக்கும் ஆண்டுகளை விட அவன் தன் சுயத்தில் முடிவுகளை எடுக்கும் ஆண்டுகள் அதிக மாகயிருக்கின்றது. அந்த ஆண்டுகளிலே அறிந்தோ அறியாமலோ அவன் பிரயோஜனப்படுத்திக் கொண்ட நாட்கள் எத்தனை? அவன் வீணில் கழி த்த நாடக்கள் எத்தனை? எத்தனை தட வைகள் அவன் சரியான முடிவுகளை எடுத்தான்? எத்தனை முறை தவறான முடிவுகளை எடுத்தான்? இதை அவர வர் தங்கள் நாட்களைக் குறித்து கணக்குக் பார்க்க முடியும். ஆனால் மனிதர்களோ, தங்களுக்கு கீழ்ப்பட்டி ருக்கின்றவர்களுடைய விடயத்திலே, அவர்கள் எந்த தவறும் செய்யாமல் பரிபூரண முள்ளவர்களாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார் கள். எடுத்துக்காட்டாக, ஊரிலே வசிக்கும் ஏழைக்கு நான் உதவி செய் தால் அவன் அந்த உதவியை துஷ்பிரயோகம் செய்துவிடக் கூடும். பொருளாதாரத்தை நடத்தும் ஆளுமை அவனுக்கில்லை என்று சொல்லி அவனுக்கு உதவுவதற்கு தயக்கம் காண்பிக்கின்றார்கள். அதே பிர காரமாக பரம பிதா மனிதர்கள் யாவரும் பரிபூரணராக வரும்வரை க்கும் அவனுக்கு நன்மையான ஈவுகளை கொடுக்க மாட்டேன் என்று நினைத்தால் மனிதரில் யாரும் உயிர்வாழ முடியாது. அவர் நம்மு டைய பாவங்களுக்குத்தக்கதாக நமக்குச் செய்யாமலும், நம்முடைய அக்கிரமங்களுக்குத் தக்கதாக நமக்குச் சரிக்கட்டாமலும் இருக்கிறார். பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்ப டுகிற வர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக் கிறது. இந்த உலகிலே பல மட்டங்களிலே தங்களுக்கு கிடைக்கும் சலுகைகளையும் அதிகாரங்களையும் து~;பிரயோகம் செய்பவர்கள் இரு க்கின்றார்கள். அதனால் தேவன் தம்முடைய கிருபையை மறைத்து வைக் கவில்லை. துஷ்பிரயோகம் செய்கின்றவன், தன் வாழ்க்கையை குறித்து அவன் தேவனுக்கு கணக்கு கொடுப்பான். தேவனுடைய பிள்ளைக ளாகிய நாங்கள் எங்களிடம் இருக்கும் நன்மையை பகிர்ந்து கொள் ளாமல் எங்களுக்கென்று மறைத்து வைக்கும் போது நாங்கள் எங்கள் வாழ்நாட்களை துஷ்பிரயோகம் செய்கின்றவர்களாக மாறிவிடுவோம்.

ஜெபம்:

நன்மை செய்யும் பரம தந்தையே, உம்முடைய பிள்ளைகளாக அழைக்கப்பட்ட நாங்கள், நீர் எங்கள் மேல் பொழியும் நன்மைகளை நாங் கள் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் இருதயத்தைத் தந்து நடத்து வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:48