புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 21, 2019)

தேவனுக்கு பிரியமான பலி

எபிரெயர் 13:16

அன்றியும் நன்மைசெய் யவும், தானதர்மம்பண் ணவும் மறவாதிருங்கள்; இப்படிப்பட்ட பலிகளின் மேல் தேவன் பிரியமா யிருக்கிறார்.


இன்றைய உலகிலே சபை ஐக்கியங்களில் மட்டுமல்ல, பழைய மாண வர் சங்கங்கள், ஊர் கூட்டுறவுகள், நண்பர்கள் ஐக்கியம் போன்ற பல குழுக்கள் வழியாக பரந்த அளவிலே பல உதவித் திட்டங்கள் முன் னெடுத்துச் செல்லப்படுகின்றது. அத்தகைய செயற்திட்டங்களால் அநே கர் உதவிகளை பெற்று வருகின்றார்கள். நான் செல்லும் சபை ஐக் கியத்திலே நடை பெற்றுவரும் செயற் திட்டத்திற்கு என் பங்களிப்பை கொடு த்து விட்டேன், எனவே தானதர்மங்க ளை செய்வதற்கான இந்த வருடத்திற் குரிய என்னுடைய கடப்பாடு முடிந்து விட்டது என்று சிலர் கூறுவார்கள். அல் லது, பலரும் இதற்கு ஒத்தாசையாக இருக்கின்றார்கள், இப்போது என்னிட மும் உதவி செய்யும்படி கேட்கின்றார் கள், நானும் ஏதாவது செய்ய வேண் டும் என்று கூறுபவர்களும் உண்டு. இத்தகைய கொடுப்பனவுகள் மனப்பூர்வமாகவும் உற்சாகத்துடனும் செலு த்த ப்படும் தானதர்மங்கள் அல்ல. அதாவது, நாவினாலே கர்த்தருக்கு நன்றி பலிகளை செலுத்தும் போது, அவை எங்கள் இருதயத்திலிரு ந்து எழுந்து வர வேண்டும். இருதயத்திலிருப்பதற்கும் (எங்கள் வாழ் க்கைக்கும்) நாங்கள் சொல்லும் நன்றி பலிகளுக்கும் தொடர்பில்லா திருக்கும் போது அங்கே உண்மை இருக்காது. அங்கே கருத்தான துதி இருக்காது. அதுபோலவே, செயற்திட்டங்களில் பங்களிப்பதுடன் நிறுத்திவிடாமல், தானதர்மங்கள் எங்கள் இயற்கை சுபாவமாக மாற வேண்டும். இன்று தேவனை துதிப்பது பல மனிதர்களுக்கு பளுவு ள்ள வேலை போல தோன்றுகின்றது. “எப்படியாவது இந்த நேரத்தை முடித்து விட்டால் நான் என்னுடைய மற்ற அலுவல்களுக்கு கடந்து சென்றுவிடலாம்” என்று, எண்ணங் கொள்ளும் மனிதர்களும் இருக்கி ன்றார்கள். அப்படி அல்ல, தேவனை ஆராதிப்பது எங்கள் சுபாவமாக மாற வேண்டும். அதேபோல, எங்களைச் சூழ இருக்கின்றவர்களு க்கு உதவி செய்வது (சரீர உதவி, பொருளாதார உதவி, ஆலோசனை கூறு தல்) எங்கள் சுபாவமாக மாற வேண்டும். பரம பிதா பூரண சற்குண ராய் இருப்பது போல, அவருடைய பிள்ளைகளாகிய நாங்கள் கொடு ப்பதில் வளர்ந்து பெருகுவோம்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே, கடமைக்காக நான் தானதர்மங்களை செய்யாமல், முழு இருதயத்தோடும், என்னால் முடிந்த உதவிகளை அயலவர்களுக்கு செய்யும்படிக்கு என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:27