புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 20, 2019)

புத்தியுள்ள ஆராதனை

ரோமர் 12:1

அப்படியிருக்க, சகோத ரரே, நீங்கள் உங்கள் சரீ ரங்களைப் பரிசுத்தமும் தேவனுக்குப் பிரியமுமான ஜீவபலியாக ஒப்புக்கொடுக்கவேண்டுமென்று, தேவனுடைய இரக்கங்களை முன்னிட்டு உங் களை வேண்டிக்கொள் ளுகிறேன்; இதுவே நீங் கள் செய்யத்தக்க புத்தியுள்ள ஆராதனை.


நிலையான நகரம் நமக்கு இங்கே இல்லை. வரப்போகிறதையே நாடித் தேடுகிறோம். எனவே இந்த நகரத்திற்குரியவர்கள் (உலகத்திற் குரியவர்கள்) போன்ற வேஷம் நாங்கள் தரிக்கலாகாது. எங்கள் மனம் புதிதாகிறதினாலே மறுரூபமாக வேண்டும். கிறிஸ்துவின் சாயலில் வள ரவேண்டும். நாங்கள் மறுரூபமாகும்படிக்கு எப்படியான மாறுதல்கள் எங்கள் வாழ்வில் வரவேண்டும் என்ப தைக் குறித்து ரோமர் 12 அதிகாரத் திலே நீங்கள் தொடர்ந்து வாசிக்க லாம். அவற்றுள் ஒரு சில காரியங் களை இன்று தியானிப்போம். “உங் கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையைப்பற் றிக்கொண்டிருங்கள். சகோதர சிநேகத் திலே ஒருவர்மேலொருவர் பட்சமாயிருங்கள்; கனம்பண்ணுகிறதிலே ஒருவ ருக்கொருவர் முந்திக்கொள்ளுங்கள். உங்களைத் துன்பப்படுத்துகிறவர்களை ஆசீர்வதியுங்கள், ஆசீர்வதிக்கவேண் டியதேயன்றி சபியாதிருங்கள்.” இவை களை முதலாவதாக நாங்கள் எங்கள் குடும்பத்திலும், நாங்கள் கூடி ஆராதி க்கும் சபையிலும் செய்ய பழகிக் கொள்ள வேண்டும். அதாவது, வன் மம், பகை, பொறாமை, விரோதங்களை மனதில் வைத்திருக்கும் போது, எங்கள் துதி ஆராதனை தேவனுக்கு பிரியமான ஜீவ பலியாக இருக்க மாட்டது. ஏனெனில், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிகின்றவனுடைய மனதில் இப்படியாக மாம்சத்தின் கிரியைகள் குடிகொண்டிருக்கக் கூடாது. எங்கள் உள்மனதில் ஒன்றை வைத்துக் கொண்டு, முகஸ்துதி செய்யக் கூடாது. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவைக் காட்டிக் கொடுத்த அவருடைய சீ~னாகிய யூதாஸ், கர் த்தரை முத்தம் செய்து காட்டிக் கொடுத்தான். அது வஞ்சனையான முத் தம். அவனுடைய மனதிலே சாத்தான் புகுந்திருந்தான். (லூக்கா 22:3) கர்;த்தரை கண்ட போது, ரபீ என்று அழைத்து முத்தம் செய் தான். எனவே தேவனுக்கு ஏற்புடைய ஆராதனை செய்யு ம்படிக்கு எங்களது இருதயத்தை எப்போதும் பரிசுத்தமாக காத்துக் கொள்வோம்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, நான் அன்பில் பரிசுத்தனாக இருக் கும்படிக்கு என்னுடைய இருதயத்தில் வஞ்சனையை வைத்திருக்காமல், பரிசுத்தத்தை காத்துக் கொள்ள என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 13:14