புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 19, 2019)

தேவனுக்கு ஏற்ற இருதயம்

சங்கீதம் 51:17

தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்டதுமான இருதயத்தை நீர் புறக்கணியீர்.


பழைய ஏற்பாட்டின் நாட்களிலே, பாவ நிவாரண பலிகள்;, சர்வாங்க தகன பலிகள் போன்ற பலவிதமான பலிகள் செலுத்தப்பட வேண்டி யதாயிருந்தது. இவை இனி வரப்போகும் காரியங்களுக்கு நிழலாக செய்யப்பட்டு வந்தது. இயேசுகிறிஸ்துவினுடைய சரீரம் ஒரேதரம் பலியிடப்பட்டதினாலே, அவருடைய பரிசுத்த இரத்தம் எங்கள் பாவங்களுக்காக சிந்தப்பட்டது. அவரு டைய திருச்சரீரம் எங்கள் பாவ ங்களு க்காக அடிக்கப்பட்டது. தேவனுடைய சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டி ருக்கிறோம். (எபி 10:1-10). இன்றைய நாட்களிலே நாங்கள் எங்கள் உதட்டின் ஸ்தோத்திர பலிகளை தேவனுக்கு செலு த்துகின்றறோம். இன்று என்று கூறுவ தால், பழைய ஏற்பாட்டின் காலங்களில் துதிபலியும் ஸ்தோத்திரமும், ஜெபமும் தேவனுக்கு ஏறெடுக்கப்படவில்லை என் பது பொருள்; அல்ல. தானியேல், தாவீது போன்றவர்களின் வாழ்க்கை யிலே எப்போதும் ஜெபமும், துதியும் இருந்தது. அன்று தங்கள் பாவங் களுக்கான பலியாக ஆடுகளையும், காளைகளையும், புறாக்களையும் செலுத்தி, தங்கள் இருதயத்திலே மனந்திரும்பினவர்களாக இருக்க வேண் டியதாயிருந்தது. அப்படி மனந்திரும்புகின்ற இருதயம் இல்லாமல் பலி களைச் செலுத்துவது தேவனுக்கு அருவருப்பாக இருந்தது. அதில், அன்றும், இன்றும் என்றும் எந்த மாற்றமுமில்லை. இன்று இயேசு கிறி ஸ்து வாயிலாக பாவ மன்னிப்பின் நிச்சயத்தை பெற்ற நாங்கள், அதே பிரகாரமாக மனந்திரும்பின வாழ்க்கை வாழ வேண்டும். அப்படி வாழா மல், எங்கள் உதட்டின் ஸ்தோத்திர பலிகளையும், எங்கள் காணிக்கை ளையும் நாங்கள் செலுத்தும் போது, அது தேவனுக்கு உகந்த வாச னையாக இருக்க மாட்டாது. தேவனுக்கு ஏற்புடைய பலிகள் எவை? அவர் பிரியப்படும் காரியம் என்ன? தேவனுக்கேற்கும் பலிகள் நொறுங்குண்ட ஆவிதான்; தேவனே, நொறுங்குண்டதும் நருங்குண்ட துமான இருதயத்தை நீர் புறக்கணியீர். எங்கள் மாம்ச எண்ணங்களால் எங்கள் இருதயம் கடினப்பட்டு, தொடர்ச்சியாக தேவனுடைய சத்த த்திற்கு கீழ்ப்படிய மறுக்கும் போது, எங்கள் இருதயம் உணர்வற்றுப் போய் விடும். எனவே தேவனுடைய வார்த்தைக்கு எப்போதும் கீழ்ப்ப டிகின்றவர்களாய் நாங்கள் இருக்க வேண்டும்.

ஜெபம்:

உண்மையுள்ள தேவனே, உம்முடைய குமாரனாகிய இயேசு வின் வழியாய் பாவ மன்னிப்பின் வழியை ஏற்படுத்தினீர். அந்த பெரி தான சிலாக்கியத்தை பெற்ற நான் உண்மையுள்ளவனா(ளா)க வாழ வழி நடத்தும்.இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபிரெயர் 7:27