புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 18, 2019)

வார்த்தைக்கு செவி கொடுங்கள்

1 சாமுவேல் 15:22

பலியைப்பார்க்கிலும் கீழ் ப்படிதலும், ஆட்டுக்கடாக் களின் நிணத்தைப்பார்க் கிலும் செவிகொடுத்தலு ம் உத்தமம்.


சவுல் என்னும் மனிதன் சமஸ்த இஸ்ரவேல் ராஜ்யத்திற்கும் முதலா வது ராஜாவாக அபிஷேகம் பண்ணப்பட்டான். சவுல் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டிருந்தாலும், அவருடைய வாழ்க்கையில் தீர் மானங்களை எடுப்பதற்கு அவருக்கு சுயாதீனம் இருந்தது. அதாவது, தேவனாகிய கர்த்தர் ஒரு காரியத்தை செய்யாதே என்று கூறும் போது, அதற்கு கீழ்ப்படிவதற்கோ அல்லது அதை தன் விருப்பப்படி செய்வதற்கோ அவருக்கு சுதந்திரம் உண்டு. ஒரு சம யம், தேவனுடைய தீர்க்கதரிசியாகிய சாமுவேல் சவுலை நோக்கி: இப்போ தும் கர்த்தருடைய வார்த்தைகளின் சத்தத்தைக்கேளும்: இஸ்ரவேலர் எகிப் திலிருந்து வந்தபோது, அமலேக்கு அவ ர்களுக்கு வழிமறித்த செய்கையை மனதிலே வைத்திருக்கிறேன். இப்போ தும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவன்மேல் இரக்கம் வைக் காமல், அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, முற்றாக அழித்துவிடும்படி கூறினார். சவுல் அந்த யுத்தத்தில் வெற்றி பெற்று திரும்பி வரும்போது, அமலேக்கின் ராஜாவாகிய ஆகாவையும், கொழு மையான ஆடுகளையும் கொண்டு வந்தான். இங்கே, தன்னுடைய சுய தீர்மானத்தின்படி, ஜனங்கள் எல்லோர் முன்பாக, தேவனுடைய வார்த் தையை அற்பமாக எடுத்து, தேவ வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், தேவன் சொன்னதை செய்யாமலிருக்க துணிகரம் கொண்டான். ஏன் இப்படியாக செய்தீர் என்று தேவ மனிதனாகிய சாமுவேல் கேட்டார். அதற்கு சவுல்: தேவனுக்கு பலியிடும்படி கொழுமையான ஆடுகளை ஜனங்கள் கொண்டு வந்தார்கள் என்றான். தேவன் பலியை அல்ல கீழ் ப்படிதலையும், ஆடுகளின் இரத்தத்தைப்பார்க்கிலும் தம்முடைய வார் த்தைக்கு செவி கொடுப்பதையே விரும்புகின்றார் என்று சாமு வேல் பதில் அளித்தார். பிரியமானவர்களே, முதலாவதாக, தேவ வார்த்தை க்கு எப்போதும் கீழ்ப்படியப் பழக வேண்டும். அது எங்கள் சுபாவ மாக மாற வேண்டும். தேவ வார்த்தைக்கு விரோதமாக குற்றம் செய் தேன் என்று உணர்;த்தப்படும் போது, எந்த மறு பேச்;சுமின்றி, அதை ஏற்றுக்கொண்டு, மனந்திரும்ப வேண்டும். என்னுடைய தீர்மானத்தை நியாய ப்படுத்த முயற்சி செய்யக் கூடாது. அவருடைய சமுகத்திலே எங்கள் இருதயம் பரிசுத்தமுள்ளதாக இருக்க வேண்டும்.

ஜெபம்:

மன்னிக்கும் தேவனே, நீர் இரக்கமுள்ள தேவன்! உம்முடைய வார்த்தைக்கு விரோதமாக நான் பாவம் செய்யாதபடிக்கும், என் குற்றங் களை நியாயப்படுத்தும்படி துணிகரம் கொள்ளாதபடிக்கும் காத்தருள்வீ ராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - லூக்கா 21:33