புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 17, 2019)

வார்த்தையின்படி வாழுங்கள்

உபாகமம் 30:14

நீ அந்த வார்த்தையின்ப டியே செய்யும்பொருட்டு, அது உனக்கு மிகவும் சமீபமாய் உன் வாயிலும் உன் இருதயத்திலும் இரு க்கிறது.


நான் இந்த குற்றத்தை செய்யப் போகின்றேன், ஆனால் தண்டனையி லிருந்து தப்பித்துக் கொள்ள அல்லது மிகவும் குறைந்த பட்சமான தண்டனையைப் பெற்றுக் கொள்ள நாட்டுச் சட்டத்திலே எங்கேயாவது ஒரு சின்ன இடைவெளி இருக்கின்றதா என்று சில மனிதர்கள் தேடிக் கொள்கின்றார்கள். அதி வேகமாக, வாகனத்தை ஓட்டிச் சென்றால், ஓட்டிச் செல்பவருக்கும், அவரோடு இருப்பவர்களுக்கும், நெடுஞ்சா லையிலே வாகனங்களை ஓட்டிச் செல் லும் மற்றவர்களுக்கும் உயிர்ச்சேதம் ஏற்படலாம் என்பதற்காக, சாலை விதி கள் போடப்பட்டிருக்கின்றது. அவை எங்கள் கண்களுக்கு சமீபமாக இருக் கின்றது. அந்த சாலை விதிகளை மீறி, இன்னும் உயிரோடு இருப்பவர்கள், இனி அந்த குற்றங்களைச் செய்யாமல் உணர்வடையும்படி, சில சிறிய அபரா தங்கள் கொடுக்கப்படுகின்றது. ஆனா லும், மனிதர்கள் என்ன செய்கின்றார்கள்? அந்த விதிகளுக்கு நாங்கள் கீழ்ப்படிந்தால் எங்களுக்கும் மற் றவர்களுக்கும் அது நன்மை தரும் என்பதை சிந்தியாமல். தாம் பிடி படாமல், அதி வேகமாக வாகனங்களை செலுத்தும்படிக்கு, பொலிசார் எங்கே நிற்கின்றார்கள் என்று அறிவதற்கு கருவிகளை மாட்டிக் கொள் கின்றார்கள். அப்படி தாம் பிடிபட்டாலும், இது என்ன சின்ன அப ராதம் தானே, அதை செலுத்திவிட்டு, மறுபடியும் ஓடுவோம் என்கின் றார்கள். இந்த சம்பவங்களுக்கு ஒத்ததாகவே, தேவனுடைய வார்த் தையும் எங்களுக்கு மிகவும் சமீபமாக உண்டு. ஜீவ வார்த்தைகள் தாராளமாக எங்களுக்கு போதிக்கப்படுகின்றது. எங்கள் வாழ்க்கையை நெறிப்படுத்தும்படி பல ஆலோசனைகள் கூறப்படுகின்றது. சில இட ங்களிலே தேவன் எங்களை சிட்சித்து (தகப்பன் மகனை கண்டித்து தண்டிப்பது போல) நடத்திச் செல்கின்றார். சவால்கள் நிறைந்த இந்த உலகத்திலே, நல் வழி நடப்பதற்கு துணையாக எங்களுக்கு தூய ஆவி யானவரை ஈவாக தந்திருக்கின்றார். நாங்கள் நித்திய பேரின்பத்திலே பங்கடையத்தக்கதாக, தேவன்தாமே இவைகளை ஏற்படுத்தியிருக்கி ன்றார். எனவே, நாங்கள் குற்றம் செய்யும் வழிகளைத் தேடாமல், எங்க ளுக்குச் சமீபமாக இருக்கின்ற தேவ வார்த்தையைப் பற்றிக் கொண்டு, அதன்படியே எங்கள் வாழ்க்கையைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

நீதியின் தேவனே, என் மாம்ச எண்ணங்களை நிறைவேற்றும் வழிகளை நான் தேடாமல், உம்மைப் பற்றிக் கொண்டு வாழும்படி நீர் தந்த வார்த்தைகளிலே நிலைத்திருந்து கனி கொடுக்க என்னை வழிநட த்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:14-15