புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 16, 2019)

நன்மை, தீமை, ஜீவன், மரணம்

உபாகமம் 30:15

இதோ, ஜீவனையும் நன் மையையும், மரணத்தை யும் தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத் தேன்.


பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசே~ ஊழியத்தின் வேலை க்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடை வதற்காகவும், தேவன் தாமே, சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசே~கராகவும், சிலரை மேய்ப்பரா கவும், போதகராகவும் ஏற்படுத்தினார். அதுமட்டுமல்ல இன்னும் அநேக உதவி ஊழியங்களும் ஏற்படுத்தப்பட் டிருக்கின்றது. ஏனெனில், இயேசுவின் இரத்தத்தினால் மீட்கப்பட்டு, பரிசுத்த வான்களாக அழைக்கப்பட்டவர்கள், முற்றிலும் கிறிஸ்துவின் சாயலில் பூர ணப்பட வேண்டும். அறுவடை மிகுதி வேலையாட்கள் குறைவு என்ற பிரகா ரமாய், இந்த பூமியிலே தங்களை படை த்தவரை அறியாத ஜனங்கள் பெரு கிக் கொண்ட போகின்றார்கள். எனவே மீட்பின் நற்செய்தியை அறிவிக்க ஆட்கள் தேவை. மீட்கப்பட்ட ஜனங்கள், கர்த்தருடைய நாளுக்கென்று காத்திருக்கின்றவர்களாய் இருக்க வேண் டும். சோர்ந்து போகாமல் இருக்கும் பொருட்டு சபையானது பக்தி விருத்தி அடைய வேண்டும். இவைகளை நடப்பிப்பதற்காகவே அநேக தேவ ஊழியர்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றார்கள். ஆதியிலே ஆதாம் ஏவாளாகிய முதல் பெற்றோர் நித்திய நித்தியமாய் சமாதானமான வாழ்வு வாழும்படிக்கு, நன்மை தீமை அறியும் மரத்தின் கனியை புசிக்க வேண்டாம் என்று கட்டளை கொடுத்திருந்தார். ஆனால், அந்த கட்டளையை கைகொள்ளுவதற்கும், அதை மீறுவதற்கும் உரிய சுயா தீனத்தை மனிதர்களுக்கு கொடுத்தார். மனிதர்களை இயந்திரங்களாக உருவாக்காமல் தம்முடைய சாயலில் உருவாக்கினார். இன்று நன்மை, தீமை, ஜீவன்;, மரணம் இவை நான்கும் எங்கள் முன் வைக்கப்பட்டிரு க்கின்றது. ஆதாம் ஏவாளைப் போல நாங்கள் எதையும் தெரிந்து கொள் ளலாம் என்ற சுயாதீனம் எங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கின்றது. நன்மை யையும், ஜீவனையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற தேவ ஆலோ சனையின் வார்த்தைகள் எங்களுக்கு எழுதிக் கொடுக்கப்பட்டிருக்கி ன்றது. அந்த வார்த்தைகளை விளங்கிக் கொள்ளும்படி ஊழியர்கள் வழியாக போதனை செய்யப்பட்டு வருகின்றது. நலமானதைப் பற்றிக் கொள்ளுகின்றவர்கள் நன்மையையும் ஜீவனையும் கண்டடைவார்கள்.

ஜெபம்:

அன்பின் தேவனே, நான் பக்திவிருத்தியடைந்து, கிறிஸ்துவின் சாயலில் பூரணப்படும்படி நீர் ஊழியர்கள் வழியாக கொடுக்கும் ஜீவ வார்த்தைகளை பற்றிக் கொள்ள என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 4:15-16