புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 15, 2019)

வேறு பிரிக்கப்பட்ட வாழ்க்கை

சங்கீதம் 95:7

அவர் நம்முடைய தேவன். நாம் அவர் மேய்ச்சலின் ஜனங்களும், அவர் கைக்குள்ளான ஆடுகளுமாமே.


ஒரு மறி ஆடு தன் நான்கு குட்டி ஆடுகளை நோக்கி: வளவின் அப் புறமாக நாற்றமெடுக்கும் சேறு நிறைந்த குட்டை ஒன்று உண்டு, அங்கே பன்றிகள் சேர்ந்து விளையாடுவதுண்டு, அந்தப் பக்கமாக போகா திருங்கள் என்று புத்தமதி கூறியது. முதலாவது குட்டி “அங்கே போய் பார்ப்பதில் என்ன தவறு என்று மனதில் கூறிக் கொண்டு, தன் தாயின் ஆலோசனையைத் தள்ளி, அந்த சேற் றுப் பக்கமாக போக்கும்வரத்துமாக இரு ந்தது. நாளடைவில், அந்த சேற்றின் நாற் றம் அந்த குட்டி ஆட்டிற்கு பழகிவிட்ட தால், அங்கிருந்த குட்டைக்கு அருகே சென்று பார்த்து வந்தது. இதுவரைக் கும் வந்து விட்டேன், ஒருமுறை இற ங்கிப் பார்ப்போம் என்று ஒரு நாள் சேற்றிற்குள் குதித்து விட்டது. அதை அறிந்து மற்றய ஆட்டுக் குட்டிகளில் ஒன்று அண்ணன் சேற்றிற்குள் இறங்கி விட்டானே, நான் இறங்கினால் என்ன என்று சொல்லிக் கொண்டது. ஆனால் மற்றய ஆடுகளில் ஒன்று, சேறு அதிக நாற்ற மும் அழுக்கும் நிறைந்தது. அம்மாவின் சொல்லைக் கேளாமல் அண் ணன் கெட்டுப் போனான் என்று நானும் கெட்டு போகமாட்டேன் என்று கூறியது. பிரியமானவர்களே, சில வேளைகளிலே இப்படிப்பட்ட கதை களை நாங்கள் வாசிக்கும் போது, இது சற்றும் சாத்தியமற்ற கதை, நகைப்புக்குரியது என்று எங்களுக்குத் தோன்றலாம். சற்று சிந்தித்துப் பாருங்கள்! எங்கள் இயேசு நல்ல மேய்ப்பராக இருக்கின்றார். நாங்கள் அவர் மேய்ச்சலின் ஆடுகளாக இருக்கின்றோம். எங்களை பாவச் சேற் றில் இருந்து தூக்கி எடுத்தார். ஆனால் இன்று தேவனுடைய பிள் ளைகளில் பலர் தங்கள் மாம்ச இச்சைகளை நிறைவேற்ற சாட்டுப் போக்குகளை தேடுகின்றார்கள். எப்படிப்பட்ட சாட்டுப் போக்குகளை அதிகமாக கூறுகின்றார்கள்? அந்த மூத்தவரே அப்படி செய்துவிட்டா ராம், நாங்களும் அப்படி செய்தால் என்ன? நாங்கள் அங்கு போனால் என்ன? நாங்கள் அதைப் பார்த்தால் என்ன? என்று கூறுகின்றார்கள். பாவமாக தோன்றுகின்ற காரியங்களைக் கூட விட்டுவிடும்படியாக பரி சுத்த வேதாகமம் எங்களுக்கு அறிவுரை கூறுகின்றது. ஆதலால் நாங் கள் அவன் இப்படிச் செய்கின்றான், மற்றவன் அதைப் பார்க்கின்றான், இன்னுமொருவன் அங்கே செல்கின்றான் என்றிராமல், நாங்கள் எங் கள் மேய்ப்பனாகிய இயேசுவின் பின் செல்லுவோம்.

ஜெபம்:

கிருபையுள்ள நல்ல தகப்பனே, பரிசுத்த வாழ்வு வாழும்படியாய் பாவ சேற்றிலிருந்து என்னை தூக்கி பிரித்தெடுத்தீர். அதை உணர்ந்து, உம் வார்த்தைகளின்படி வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 10:11