புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 14, 2019)

ஆத்தும மீட்பின் வழி

யோவான் 14:6

அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன்; என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.


இந்த பூமியிலே, பல தேசங்களில், அநேக நிறங்களில்;, பல விதமான தோற்றங்களிலுமுள்ள ஜனங்கள் வாழ்ந்து வருகின்றார்கள். நாட்டுக்கு நாடு வேறுபட்ட மொழிகளும், கலச்சாரங்களும் உண்டு. அபிவிருத்தி அடை ந்த நாடுகள், அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகள் என்றவரையறைக ளும் நாடுகளுக்கிடையே உண்டு. சிலர் தங்களை மேன் மக்கள் என்றும், மற்றர்கள் தங்களைவிட தரம் குறைந்தவர்கள் என்றும் எண்ணிக் கொள்வதுமுண்டு. ஆனால் யாவருக் கும் ஒரே விதமாக நடைபெறுகின்றது. இந்த பூமியிலே பிறந்த எவனும் மரி க்க வேண்டும். ஆனாலும், தங்கள் பிற ப்பைக் குறித்து அல்லது தங்களுடை யவர்களின் பிறப்பைக் குறித்து மேன் மை பாராட்டுகின்றவர்களும் உண்டு. இவ்வண்ணமாய் மரித்த பின்னும் தங் களுடையவர்களை குறித்து மேன்மை யடைபவர்களும் உண்டு. இந்த மேன்மைகளையெல்லாம் இந்த பூமிக் குரியவர்கள் வகுத்து வைத்திருக்கின்றார்கள். பூமியின் மேன்மையி னால், பரலோகத்திற்குரியவைகளை மாற்ற முடியுமோ? இல்லை, மாற் றவே முடியாது. மனிதன் மரிக்கும் நாளில், அவன் யோசனை அழிந்து போகும். மனிதன் மேன்மை பாராட்டும் அவனுடைய சரீரம் அழிந்து போகும். அவனுடைய ஆவி தேவனிடத்திற்குத் திரும்பும். ஆனால், அவன் ஆத்துமா எங்கே போகும்? இந்த பூமியிலே பாவத்திலே வாழும் ஆத்துமாவிற்கு நித்திய மரணம் நியமிக்கப்பட்டிருக்கின்றது. இந்த பாவம் என்பது என்ன? ஆதியிலே முதல் மனிதர்கள் (ஆதாம், ஏவாள்) தேவனுடைய கட்டளையை மீறி, தங்கள் சுய இஷ்டப்படி பிசா சுடன் இணைந்து தங்களுக்கென வகுத்துக் கொண்ட வழி அதுவே அந்த பாவம். இது தேவனுடைய சித்தம் அல்ல. எனவே, ஒருவனும் அந்த பாவத்தினால் அழிந்து போகாமல், நித்திய ஜீவனை அடையும் படிக்கு இயேசு ஒரு வழியை திறந்தார். இந்த வழி பரலோகத்திற்கு செல்லும் வழி. நித்திய மேன்மையடையும் வழி, யாவருக்கும் திறக் கப்பட்டிருக்கும் வழி. பாரபட்சம் ஏதும் இல்லை. அன்று தன் இஷ்டத் தினால் தன் ஆத்துமாவை கெடுத்துக் கொண்ட மனிதன், இன்று தன் இஷ்டத்தினால், அதாவது, இயேசு அண்டை வருவதினால் மறுபடியும் தன் ஆத்துமாவிற்கு நன்மை செய்ய வழியுண்டாக்கப்பட்டிருக்கின்றது.

ஜெபம்:

பரலோக தந்தையே, என் ஆத்துமா பாவத்திலே அழியாமல், மீட்கப்பட்டு பரலோகம் செல்லக் கூடிய இயேசு என்னும் வழியை காண்பித்திருக்கின்றீர். அந்த வழியிலே நடக்க என்னை பெலப்படுத்தும். இரட் சகர் இயேசு வழி யாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிரசங்கி 12:13-14