புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 12, 2019)

பட்சபாதம் இல்லாத தேவன்

யோபு 36:15

சிறுமைப்பட்டவர்களை அவர் சிறுமைக்கு நீங்கலாக்கி, அவர்கள் ஒடுக்க ப்பட்டிருக்கையில் அவர்கள் செவியைத் திறக்கிறார்.


ஒரு தொழிற்சாலையிலே பலமட்டங்களிலே வேலை பார்த்து வரும் தொழி நுட்ப வல்லுனர்கள், பொறியியலாளர்கள், கணக்காளர்கள் போன்ற பலதரப்பட்ட தேர்ச்சி பெற்ற ஊழியர்கள் இருந்தார்கள். அதே வேளை யிலே, உதவிக்காக அமர்;த்தப்பட்ட சில எளிமையான ஊழியர்களும் இரு ந்தார்கள். ஆனால், அங்கிருந்த இயக்குனர்களில் ஒருவர், தேர்ச்சி பெற்ற ஊழியர்களோடு பேசும் முறையானது, எளிமையும் சிறுமையு மான ஊழியர்களுடன் பேசும் முறையி லிருந்து வேறு பட்டிருந்தது. அந்த இய க்குனரின் பார்வையிலே உதவிக்காக அமர்த்தப்பட்ட ஊழியர்கள் அற்பமாக தோன்றினார்கள். அவர்கள் பொருந்தின சம்பளத்திற்கு மிஞ்சின வேலைகளைப் பார்த்தாலும், அவர்களோடு பேசும் போது கடுமையான தொனியுடன் பேசிக் கொள்வார். ஏனெனில் அநேக மனிதர் களுடைய பார்வையிலே பட்சபாதம் உண்டு. தேவனுடைய பார்வையிலே பட்சபாதம் இல்லை. உலக ஆஸ்தி, கல்வி, அந்தஸ்து போன்றவை கள் இந்த உலகத்திற்குரியவைகள். அவைகள் ஒருவனுக்கு இருந்தா லும் இல்லாவிட்டாலும் அவன் பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை, தன்னுடைய வாழ்வில் நிறைவேற்றுபவனாக இருந்தால், அவனைப் பார்த்து உத்தம ஊழியன் என்று அழைப்பார். ஒரு வேளை எங்க ளுக்கு கொடுக்கப்பட்ட வேலை சிறியதாக இருக்கலாம், மனிதர் களுடைய பார்வையிலே அற்பமாக எண்ணப்படலாம். எங்கள் பெலன் குறைவுள்ளதாக இருக்கலாம். எது எப்படியாக இருந்தாலும், கர்த்தரு டைய கணக்கிலிருந்து ஒருவரும் எங்களைப் பிரிக்க முடியாது. பிரிய மானவர்களே, இன்று நீங்கள் அற்பமாக எண்ணப்பட்டால் கவலை யடையாதிருங்கள். கர்த்தருடைய பார்வையிலே நீங்கள் விலையேற ப்பட்டவர்கள். உங்களது தாழ்மையுள்ள சிந்தையை விட்டுவிடாதிருங் கள். நீங்கள் கண்ணியமாகச் செய்யும் நற்கிரியைகளையும் விட்டு விடாதிருங்கள். ஒரு வேளை நாங்கள் மற்றவர்களை பட்சபாதத்தோடு நடத்து கின்றவர்களாக இருந்தால், அதை உடனடியாக விட்டு விட வேண் டும். எங்களுடைய கர்த்தரைப் போல நாங்களும், அவர்களை ஆதரி க்கின்றவர்களாக இரு க்க வேண்டும்.

ஜெபம்:

இரக்கம் நிறைந்த தேவனே, நீர் மனிதர் பார்க்கின்ற பிரகாரமாக பார்க்கின்றவர் அல்ல. உம்மைப் போல நானும் சிறுமைப்பட்ட ஜனங் களை ஆதரிக்கின்றவனா(ளா)க இருக்க என்னை வழிநடத்தும். இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 18:27