புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 11, 2019)

வெற்றி வாழ்க்கையின் வழி

எபேசியர் 6:10

கடைசியாக, என் சகோ தரரே, கர்த்தரிலும் அவ ருடைய சத்துவத்தின் வல்லமையிலும் பலப்படுங்கள்.


பிசாசின் தந்திரங்களோடு எதிர்த்துநிற்கத் திராணியுள்ளவர்களாகும்படி, நாங்கள் அணிந்து கொள்ள வேண்டிய போராயுதங்களை தேவன் எங்களுக்கு கொடுத்திருக்கின்றார். எனவே தேவனுக்கு கீழ்ப்படிந்து அந்த சர்வாயுதவர்க்கத்தை நாங்கள் தரித்துக் கொள்ள வேண்டும். இந்தப் போராயுதங்கள், இந்த உலகத்திலே காணப்படும் வெளியரங்க மானதாயுள்ள போராயுதங்கள் அல்ல. அவை உள்ளான மனிதனுக்குரி யவைகள். அவை சத்தியம், நீதி, சமா தானம், விசுவாசம், இரட்சிப்பு, தேவ வசனம் என்பவைகளே. சத்தியம் என் னும் கச்சையை உங்கள் அரையில் கட்டினவர்களாயும் நீதியென்னும் மார் க்கவசத்தைத் தரித்தவர்களாயும்;, சமா தானத்தின் சுவிசே~த்திற்குரிய ஆய த்தம் என்னும் பாதரட்சையைக் கால்க ளிலே தொடுத்தவர்களாயும், பொல் லாங்கன் எய்யும் அக்கினியாஸ்திரங் களையெல்லாம் அவித்துப்போடத்தக்கதாய், எல்லாவற்றிற்கும் மேலாக விசுவாசமென்னும் கேடகத்தைப் பிடித்துக்கொண்டவர்களாயும் நில் லுங்கள். இரட்சணியமென்னும் தலைச்சீராவையும், தேவ வசனமா கிய ஆவியின் பட்டயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். எந்தச் சமயத்திலும் சகலவிதமான வேண்டுதலோடும் விண்ணப்பத்தோடும் ஆவியினாலே ஜெபம்பண்ணி, அதன்பொருட்டு மிகுந்த மன உறுதியோடும் சகல பரிசுத்தவான்களுக்காகவும் பண்ணும் வேண்டுத லோடும் விழித்துக்கொண்டிருங்கள். சத்தியம், நீதி, சமாதானம், விசு வாசம், இரட்சிப்பு, தேவ வசனம் இவைகளை நாம் அறிந்து வளர்ந்து இன்னுமாய் பெருகும்படிக்கு பரிசுத்த வேதாகமத்தை தினமும் தியா னிக்க வேண்டும். அத்துடன் அனுதினமும் ஜெபத்திலே தரித்திருக்க வேண்டும். தீங்குநாளிலே பிசாசின் தந்திரங்களை எதிர்த்து நிற்க இவை யாவும் எங்களை திராணியுள்ளவர்களாக்கும். இது தேவனுடைய வார் த்தை, அந்த வார்த்தைக்கு நாங்கள் கீழ்ப்படியும் போது, எங்கள் உள் ளான மனிதன் தேவ சாயலை அடையாதபடிக்கு, பிசாசானவனின் தந் திரமான காரியங்களை, நாங்கள் உணர்ந்து கொள்ளும்படிக்கு, பிர காசமுள்ள மனக் கண்களை உடையவர்களாக இருப்போம். இவ்வண் ணமாக போராயுதங்களை தரித்துக் கொண்டவர்களாக கர்த்தரிலும், அவருடைய திவ்விய வல்லமையிலும் பெலப்படுவோம்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, இந்த உலகிலே வெற்றியுள்ள வாழ்க்கை வாழும்படியாய், நான் தினமும் வேதத்தை தியானித்து, ஆவி யிலே ஜெபம் செய்யும்படிக்கு என்னை வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 10:4