புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 10, 2019)

பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள்

யாக்கோபு 4:7

ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப் போவான்.


இன்றைய வசனத்திலே நாங்கள் பிசாசானவனோடு எதிர்த்து நிற்க வேண் டும் என்று கூறப்பட்டிருக்கின்றது அப்படியானால் நாங்கள் எப்படி பிசா சானவனோடு எதிர்த்து நிற்பது? எப்படி ஒரு அநீதி நிறைந்தவனோடு எதிர்த்துப் போராடுவது? இந்த உலகிலே அது மிகவும் கடினமான செயல். உங்கள் வீட்டின் அறையொன்று இருளாக இருக்கின்றது, எப்படி அந்த இருளை அங்கிருந்து அகற்ற முடியும்? நாங்கள் அங்கு விளக்கேற்றுவதால் அல்லவோ! ஆம், ஒளிக்கும் இருளுக்கும் ஐக்கியமேது? ஓளி இருக்கும் இடத்தில் இருள் மேற் கொள்ள முடியாது. எனவே, நாங்கள் செய்ய வேண்டிய காரியம் கர்த்தரா கிய இயேசுவின் பேரொளியை எங் களில் வீசச் செய்ய வேண்டும். “எழு ம்பிப் பிரகாசி உன் ஒளிவந்தது, கர்த் தருடைய மகிமை உன்மேல் உதித் தது. இதோ, இருள் பூமியையும், காரி ருள் ஜனங்களையும் மூடும்; ஆனாலும் உன்மேல் கர்த்தர் உதிப்பார்; அவருடைய மகிமை உன்மேல் காண ப்படும். உன் வெளிச்சத்தினிடத்துக்கு ஜாதிகளும், உதிக்கிற உன் ஒளி யினிடத்துக்கு ராஜாக்களும் நடந்துவருவார்கள்.” (ஏசாயா 60:1-3) என்று பரிசுத்த வேதாகமம் கூறுகின்றது. இதற்கொத்ததாகவே, நாங் கள் எங்கள் தேவனாகிய கர்த்தருடைய வார்த்தைகளுக்கு கீழ்ப்படியும் போது, பிசாசானவனை எதிர்த்து மேற்கொள்கின்றவர்களாக இருக்கின் றோம். முதற்படியாக, மற்றவர்களுடைய வாழ்க்கையிலே அல்ல அவ ரவர் தங்கள் தங்கள் சொந்த வாழ்க்கையில் இதை நடப்பிக்க வேண் டும். ஆதிப் பெற்றோராகிய ஆதாம் ஏவாள், தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படியாமல், பிசாசானவனுடைய சத்தத்திற்கு கீழ்ப்படிந்து, அவன் கூறியதை செய்ததால், பிசாசானவனினால் மேற்கொள்ளப்பட்டார்கள். நாங்கள் மாம்சத்திலே போராடுகிறவர்கள் அல்ல. அதாவது, ஒருவன் அசு த்த ஆவியால் பிடிக்கப்பட்டு, பயங்கரமான தீய செயல்களை செய்கின் றவனாக இருந்தால், அவனை கட்டி வைத்து அடித்து மிரட்டுவது எங்கள் தேவனுக்கேற்ப கிரியையல்ல. இயேசுவின் நாமத்தினாலே, அந்த அசுத்த ஆவியை நாம் மேற்கொள்ளுகின்றவர்களாக இருக்க வேண்டும். இப் படியாகவே நாங்கள் பிசாசானவனை எதிர்த்துப் போராடுகின்றோம்.

ஜெபம்:

சர்வவல்லமையுள்ள தேவனே, எங்களுடைய போராட்டம் மாம் சத்திற்குரியதல்ல என்பதை நாங்கள் எப்போதும் உணர்ந்தவர்களாக, உம்முடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்திருக்க எங்களை வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 2 கொரி 6:14-18