புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 09, 2019)

பந்தய பொருளை நோக்கி

பிலிப்பியர் 3:14

கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப்பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்


கல்வி கற்பதிலே ஆர்வமுள்ள மாணவன், ஆரம்ப வகுப்புகளிலே, எப் போதும் பாடசாலையில் சொல்லிக் கொடுக்கப்படும் பாடங்களை கவ னமாகப் படித்து, பரீட்சைகளிலே சிறந்த புள்ளிகளை எடுத்து வந்தான், சில ஆண்டுகள் கடந்து சென்ற வேளையிலே, தன்னைத் சூழ உள்ள சில மாணவர்கள் எப்போதும் அநீதியான செயல்களிலே ஈடுபடுவ தைக் கண்டான். பரீட்சை நேரங்களில் கூட சில மாணவர்கள், நீதியற்ற காரிய ங்களை செய்து, புள்ளிகளை பெற்றுக் கொள்ளுவதை அவதானித்தான். நான் முறையாக படித்து புள்ளிகளை எடுக் கின்றேனே, இவர்கள் இலகுவாக புள் ளிகளை எடுக்கின்றார்களே, என்று தன் கண்களை அவர்கள் மேல் பதிய வைத்தான். அவர்கள் குறைகளை மேலி டத்திற்கு அறிவிக்க வேண்டும், அநீதி களை தடுக்க வேண்டும் என்று பல முயற்சிகளை எடுத்து வந்தான். அவன் எவ்வளவு முயற்சி செய்தாலும், அநீதியான செயல்முறைகள் அதிகரித்துக் கொண்டே போயிற்று. ஆனால் நன்றாக படித்தவனு டைய புள்ளிகள் குறைய ஆரம்பித்துவிட்டது. பிரியமானவர்களே, இத ற்கொத்ததாகவே, இந்த உலகத்தில் அநீதி மலிந்து கொண்டு போவது உண்மை. அநீதியை ஒழிப்பதற்கல்ல, முதலாவதாக எங்கள் வாழ்வில் தேவனுடைய நீதியை நிறைவேற்ற பிரயாசப்பட வேண்டும். அதன் பொருட்டு, தேவனுடைய ராஜ்யத்திற்குரியவைகளை எங்கள் வாழ்வில் பெருகச் செய்ய வேண்டும். அப்படியானால், அவைகளை ஒழிப்பதற்கு நாங்கள் பிரயாசப்படக் கூடாதா? பிரயாசப்படலாம் ஆனால் எங்கள் வாழ்க்கையில் நீதியை நடப்பிக்க கொடுக்கப்பட்ட நேரங்களை, மற்றவ ர்களுடைய வாழ்க்கையிலுள்ள அநீதியை ஒழிப்பதற்கு கொடுக்கப்பட லாகாது. எங்களுடைய இலக்கு பரலோகம்! எங்களுடைய சொந்த பெல த்தால் நாங்கள் அங்கு செல்ல முடியாது. எனவே எங்கள் கண்கள் எப்போதும் கர்த்தராகிய இயேசுவின் மேல் இருக்க வேண்டும். அதை திசை திருப்பி வேறுகாரியங்களிலே எங்கள் கண்களை பதிய வைக்க வேண்டும் என்பதே எதிராளியானவனின் பெரிதான சதித்திட்டம். எனவே, நாங்கள் எங்கள் கண்களை பரம அழைப்பின் பந்தயப் பொருளின் மேல் வைப்போம்.

ஜெபம்:

என்னை அழைத்த தேவனே, உம்முடைய மகத்துவமான அழை ப்பை நான் காத்துக் கொள்ளும்படிக்கு, எந்நேரமும் பரலோகமாகிய இல க்கை மறந்து போகாதபடி இருக்க கிருபை செய்யும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:33