புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 07, 2019)

வழிகளை ஆராய்ந்து அறியுங்கள்

ஏசாயா 55:8

என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார்.


தேவனுடைய வார்த்தையை மையமாக வைத்து ஒரு காரியத்தை ஒரு வன் ஆராய்ந்து பார்ப்பதற்கு இடங் கொடாமல், தன்னுடைய உணர் வுகளின்படி முடிவுகளை எடுக்கும்படி, அவன் மனதிலே உந்துதல் வரும் போது, அவனுடைய வாழ்க்கையில் பெலவீனம் தலை தூக்கி விட்டது என்பது பொருள். அப்போது அவனுடைய வழிகள் யாவும் அவ னுக்கு சரியானதாகவே தெரியும். அந்த வழிகளில் கண்ணிகள் உண்டு. அந்த வழிகளின் முடிவும் அழிவு. எங்கள் பெலவீன நேரங்களில் நாங்கள் எடுக்கக்கூடிய சில தவறான தீர்மானங்கள் எவை என்பதை இன்று பார்ப்போம். இளம் பிரயாத்திலே வாலிபர்கள் தங்கள் திருமணத்தைக் குறித்து எடுக்கும் முடிவு. வாலிபத்தின் பாவ இச்சைகள் எது என்பதை உண ர்ந்து கொள்ளாமல், தாங்கள் யாருடன் வாழப்போகின்றோம் என்பதை தங்கள் பெலவீன நேரங்களில் அதிகமா னவர்கள் நிச்சயிக்கின்றார்கள். அது மட் டுமல்ல, தேவனுக்குப் பயந்து, தேவ வழியிலே நடக்கும் துணையை தங் கள் பிள்ளைகளுக்குத் தேடிக் கொள்ளாமல், கல்வி, குடும்ப அந்தஸ்து, பணம் இவைகளை மையமாக வைத்து பெற்றோர் திருமணங்களை தங்கள் பிள்ளைகளுக்கு செய்து வைக்கின்றார்கள். மற்றும் வேலை செய்யும் இடத்திலே, பொறுமையைக் காத்துக் கொள்ளாமல், கோபம டைந்து, சக ஊழியர்களுடனும், மேற்பார்வையாளருடனும் வாக்குவாத ங்கள் செய்து, முன்பின் யோசிக்காமல் வேலையை விட்டு வெளியே றுதல். அயலவரோடு ஒத்து போகமுடியவில்லை. என்னுடைய சுபாவ ங்களை எனக்கு மாற்றமுடியாது ஆகவே வீட்டை விற்றுவிட்டு இன் னுமொரு ஊருக்கு போவோம். பாடசாலையிலே பிள்ளைக்கு ஆசிரிய ர்கள் ஒரே கரைச்சல், என் பிள்ளையை திருத்த மனதில்லை, எனவே பாடசாலையை மாற்றிவிடுவோம். இப்படியாக இந்த நாட்களிலே, வேதம் என்ன கூறுகின்றது என்று சற்று ஆராய்ந்து பார்க்க மனதில் லாமல், சபை ஐக்கியங்களை இலகுவாக மாற்றிவிடுகின்றார்கள். மேற் கூறப்பட்ட உதாரணங்களைப் போன்ற சம்பவங்கள் உங்கள் வாழ்க் கையில் ஏற்படும் போது, தீவிரமாக முடிவுகளை எடுக்காதிருங்கள். அவ் வேளைகளிலே உங்கள் உள்ளத்தில் தோன்றும் உணர்வுகளுக்கு இடங் கொடுக்காமல் தேவனுடைய பாதத்திலே அமர்ந்திருங்கள்.

ஜெபம்:

அன்பின் பரலோக தந்தையே, பெலவீன நேரங்களிலே என் உள்ளத்தின் உணர்வுகளின்படி தீவிரமாக தவறான தீர்மானங்களை எடுக்காமல், என் சொந்த வழிகளில் செல்லாதபடி என்னைக் காத்துக் கொள்ளும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - நீதி 16:25