புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 05, 2019)

கர்த்தருக்குக் காத்திருங்கள்

ஏசாயா 40:31

கர்த்தருக்குக் காத்திருக் கிறவர்களோ புதுப்பெல னடைந்து, கழுகுகளைப் போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நட ந்தாலும் சோர்ந்து போகா ர்கள்.


யுத்த நாட்களாக இருந்தபடியால், ஒரு கிராமத்திலுள்ள ஜனங்கள், குறி ப்பிட்ட இராத்திரியிலே, அருகிலுள்ள கிராமத்திற்குச் செல்லும்படியாக அரச அதிகாரிகளினால் பணிக்கப்பட்டார்கள். இருள் சூழ்ந்த வேளை, கரடுமுரடான பாதை, வனவிலங்குகள், ஊரும் பிராணிகளினால் தொல்லைகள் உண்டு, இப்படியான வேளையிலே, அந்த ஜனங்களை வழிநடத்திச் செல்லும்படி, மதுபான வெறியினால் மதிமயங்கி இருக்கும் மனிதனை அனுமதிக்க முடியுமோ? முடி யாது. ஏனெனில் அந்த மனிதனால் நிதானமாக சிந்தித்து செயலாற்ற முடி யாது. மதி மயங்கி இருக்கும் வேளை யிலே மனிதனாலே, தன் சொந்த வாழ் க்கையில் கூட சரியான முடிவுகள் எதை யும் எடுக்க முடியாது. சில வேளை களிலே, எங்கள் ஆவிக்குரிய வாழ்க் கையிலும் பெலவீனங்கள் தலை தூக் கும் போது, நாங்கள் மதிமயங்கிப் போகும் நிலைகள் உண்டாகலாம். தேவ னுடைய வார்த்தை கூறும் காரியங் களை நாங்கள் செய்யத் தவறும் போது பெலவீனங்கள் எங்கள் வாழ்க் கையை மேற்கொள்ளுகின்றது. உதார ணமாக, ஒருவருடைய மனதிலே கசப்பு உருவாகும் போது, அதை வேத வார்த்தையின்படி மேற்கொள்ள வேண்டும். அதவாது, நீங்கள் உன்னதமானவருக்கு பிள்ளைகளாக இருக்க வேண்டும் என்றால், உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்; உங்களை நிந்திக்கிற வர்களுக்காக ஜெபம்பண்ணுங்கள்” என்று வேதம் திட்டமாக கூறியி ருக்க, ஒரு மனிதன் தன் நிலையை நியாயப்படுத்தும் போது, அவன் தேவனுடைய வார்த்தையை அற்பமாக எண்ணுகின்றான். இப்படியாக பல வழிகளில் பெலவீனங்கள் எங்கள் வாழ்க்கையை சூழ்ந்து விடுகி ன்றது. இப்படியான நிலையிலே மனிதர்கள் தீவிரமாக ஒன்றன் பின் ஒன்றாக பல பிழையான தீர்மானங்களை தங்கள் வாழ்வில் எடுத்து விடுகின்றார்கள். எனவே, பெலவீனங்களும் நெருக்கங்களும்; உங்கள் வாழ்வை அழுத்தும் வேளைகளிலே, நீங்கள் எடுக்க வேண்டிய முக் கிய தீர்மானங்களை குறித்து மிகவும் அவதானமுள்ளவர்களாக இரு க்க வேண்டும். கர்த்தருக்காகக் காத்திருக்க பழகிக் கொள்ள வேண்டும்.

ஜெபம்:

இரக்கமுள்ள தேவனே> என் இரட்சிப்புமானவரே, என்னுடைய வாழ்க்கையில் பெலவீனங்கள் தலைதூக்கும் போது, நான் பின்னிட்டு, உம் வார்த்தைகளை அற்பமாக எண்ணாதபடிக்கு என்னைக் காத்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 73:26