புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 04, 2019)

நீடித்த நாட்கள்

சங்கீதம் 23:6

நான் கர்த்தருடைய வீட்டிலே நீடித்த நாட்களாய் நிலைத்திருப்பேன்.


சுபீட்சம் நிறைந்த பரந்த வல்லரசு தேசம் ஒன்றிலிருந்து, தூரத்திலுள்ள அபிவிருத்தி அடைந்து வரும் சிறிய தேசமொன்றிற்கு, தன் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தூதராக ஒரு அரச உத்தியோகஸ்த்தரை அந்த தேசத்தின் தலைவர் அனுப்பி வைத்தார். அந்த தூர தேசத்திலே, நாளா ந்த வாழ்க்கை மிகவும் சவால் நிறைந்ததாயும். எப்போதும் குழப்பங்க ளும் ஆபத்துக்களும் இருந்தும் வந்தது. தன் தேசத்தை பிரதிநிதித்து வப்படுத்தும் அந்த உத்தியோகஸ்த்தர், குறிப்பிட்ட ஒரு கால எல்லைக்கு அங்கே இருப்பார் என யாவரும் எதிர்பார்த்தி ருந்தார்கள். ஆனால், அந்த சிறிய தேச த்திலே ஏற்பட்ட உள்நாட்டு கலவரங்க ளால், அந்த உத்தியோகஸ்த்தர், முன் குறிக்கப்பட்ட கால எல்லைக்குள் மீண் டும் தன் தாய்நாட்டிற்கு வரவழைக்க ப்பட்டார். அந்நிய தேசத்தில் இருக்கும்வரை அவர் தன் தாய் நாட் டிற்கு சிறந்த ஊழியராக இருந்தார். தன் பணியை முடித்து திரும்பிய போது, தன் சுபீட்சம் நிறைந்த தன் சொந்த தேசத்திலே குடிமகனாக சுகித்திருந்தார். அதுபோலவே, பரம தேசமாகிய எங்கள் சொந்த தேசமாகிய பரலோகத்தை நோக்கியிருக்கும் எங்களுக்கு இந்த பூமி தற்காலிகமானது. தேவனுக்குப் பயந்து, அவருடைய வழியிலே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்த எங்களில் பலர், தங்கள் இளவயதிலேயே இந்த உலகத்தைவிட்டு கடந்து சென்றிருக்கின்றார்கள். சிலர் இயேசு வின் நற்செய்திக்காக இரத்தசாட்சிகளாக தங்கள் உயிரை தியாகம் செய்தார்கள். வேறுசிலர் எதிர்பாராத நோய்களாலும் விபத்துக்களா லும் மரித்திருக்கின்றார்கள். இங்கு இருக்கும்வரை அவர்கள் தங்க ளுடைய எஜமானாகிய இயேசுவின் பணியை செய்து வந்தார்கள். அவர்கள் இந்த உலகத்தைவிட்டு கடந்து செல்லும் போது, அவரோடு என்றும் நித்தியமாய் நிலைத்திருப்பார்கள். அவருக்கு பயந்து, அவ ருடைய வழியில் நடப்பவர்கள், எங்கிருந்தாலும், அவரோடே இருப்பா ர்கள். பிரிவுகள் துயரமானது. அவருடைய தீர்மானத்தின்படி அழைக்க ப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம். இந்த உல கின் பாடுகள் தற்காலத்தில் வேதனையாக தோன்றினாலும், மகிமை யிலே அவரை தரிசிக்கும் நாள் இன்பமானது. ஒரு விசுவாசியின் வாழ்வு இந்த உலக மரணத்துடன் முடிந்து போவதில்லை.

ஜெபம்:

நித்தியமான தேவனே, இந்த உலகிலே என்னதான் நடந்தா லும், மகிமையிலே உம்மைத் தரிசிக்கும் நாள் வரைக்கும், உமக்கு பயந்து நீர் கற்பித்த வழியிலே நடக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யோவான் 11:25-26