புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 02, 2019)

வெற்றி வாழ்க்கையின் வழி

உபாகமம் 6:24

இந்நாளில் இருக்கிறது போல, நம்மை அவர் உயிரோடே காப்பதற்கும், எந்நாளும் நன்றாயிருக்கிறதற்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தருக்குப் பய ந்து இந்த எல்லாக் கட் டளைகளின்படியேயும் செய்யக் கர்த்தர் நமக் குக் கட்டளையிட்டார்.


தங்கள் ராஜ்யங்களின் படைப்பலத்தைக் குறித்து பெருமை பாரட்டும் போது, சிலர் இரதங்களைக்குறித்தும், சிலர் குதிரைகளைக் குறித்தும் மேன்மைபாராட்டுகிறார்கள்;. அவ்வண்ணமாகவே இன்றைய நாட்களி லும், தங்களிடத்திலிருக்கும் போர் வீரர்களின் எண்ணிக்கையையும், நவீ னமான கனரக ஆயுதங்களையும் குறித்து மேன்மைபாராட்டுவார்கள். நாங்கள் கர்த்தரின் சேனையின் (படை) போர்ச் சேவகர்களாக இருக்கின்றோம். எங்கள் ஆயுதங்களையும், படைப்பல த்தையும் குறித்து நாங்கள் மேன்மை பாராட்டுவதில்லை. கர்த்தராகிய இயேசு வின் நாமத்தைக் குறித்தே நாங்கள் மேன்மைபாராட்டுகின்றோம். மேலே வானத்திலும், கீழே பூமியிலும், பூமி யின் கீழ் தண்ணீரிலும், மனிதர்கள் இர ட்சிப்படைவதற்கு அருளப்பட்ட மேன் மையான நாமம், இயேசுவின் நாமம். அவரே சேனைகளின் அதிபதியாகிய கர்த்தர்! அவரே எங்கள் அதிபதி! நாங்கள் அவருடைய யுத்த வீரர்களாக இருக்கின்றோம். எங்கள் மேல் பறக்கும் அவரு டைய கொடி அன்பு! பிசாசானவனே எங்கள் எதிரி. இந்த பூமியிலே வாழும் வரை எங்களுக்கு போராட்டங்கள் உண்டு. இப்பிரபஞ்சத்தின் அந்த கார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவி களின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு. அந்த போராட் டங்களிலிருந்து வெற்றி பெறும்படி நாங்கள் ஆயுதங்களைத் தரித்தி ருக்கின்றோம். அந்த ஆயுதங்கள் இந்த பூமிக்குரியவைகள் அல்ல. அவை எங்களுடைய உடற் பெலன் அல்ல. எங்களுடைய போரா யுதங்கள் மாம்சத்துக்கேற்றவைகளாயிராமல், அரண்களை நிர்மூலமாக் குகிறதற்கு தேவபலமுள்ளவைகளாயிருக்கிறது. நாங்கள் உலகத்தை அழிக்கின்றவர்கள் அல்லர். மனிதர்களை சிறைப்பிடிக்கின்றவர்கள் அல் லர். தேவ பெலத்தினாலே நாங்கள் தர்க்கங்களையும், தேவனை அறிகிற அறிவுக்கு விரோதமாய் எழும்புகிற எல்லா மேட்டிமையை யும் நிர்மூலமாக்கி, எந்த எண்ணத்தையும் கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படியச் சிறைப்படுத்துகிறவர்களாயிருக்கிறோம். கர்த்தர் என்பது அவருடைய நாமம்! எப்படிப்பட்ட போராட்டங்கள் எங்களை நோக்கி வந்தாலும் அவருடைய நாமத்திலே ஜெயங்கொள்கின்றவர்களாக இருக்கின்றோம்.

ஜெபம்:

எங்களை வழிநடத்தும் தேவனே, இந்த உலகிலே வெற்றி வாழ்க்கை வாழும்படிக்கு உம்முடைய கட்டளைகளின் வழியிலே நான் நடக்க என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 7:24-27