புதிய நாளுக்குள்..

தியானம் (கார்த்திகை 01, 2019)

ஞானத்தை வரவழையுங்கள்

நீதிமொழிகள் 9:10

கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.


ஒரு குறிப்பிட்ட ஒன்றுகூடலிலே சில நண்பர்கள் அமர்ந்திருந்து, தங் கள் பாடசாலை நாட்களின் சுவாரசியமான சம்பவங்களை பேசிக் கொண்டிருந்தார்கள். அந்த வேளையிலே தாங்கள் 10ம் வகுப்பில் படி க்கும் போது தங்களுக்கு ஆசிரியராக இருந்தவரைக் கண்டதும் திடீ ரென யாவரும் மௌனமானார்கள். தங்கள் இருக்கையில் இருந்து எழுந்து மிகவும் பணிவுடன், ஆசிரியரை கனத்துடன் வாழ்த்தினார்கள். சுமார் 30 ஆண்டுகள் கடந்துவிட்டது. அந்த நண்பர்கள் யாவரும் திருமண மாகி அவர்களுடைய பிள்ளைகள் இப் போது பாடசாலைக்கு செல்கின்றார் கள். ஒன்றுகூடலிலே அவர்கள் ஒழுக் கமாக யோக்கியமான சம்பவங்களை யே பேசிக் கொண்டிருந்தார்கள். அப் படியானால் அந்த வயதான, தங்கள் பழைய ஆசிரியரைக் கண்டதும் ஏன் மௌனமானார்கள்? அதுவே அவர்கள் தங்கள் குருவுக்கு கொடு க்கும் கனம். இந்த கனமானது, ஆசிரியர் ஏதாவது செய்துவிடுவார் என்று மனத் திகிலினால் உண்டான கனம் அல்ல. தங்கள் ஆசிரியரை குறித்த பயபக்தியாகும். அதற்கொத்ததாகவே, அவர் என்னை அடித்துப் போடுவார். அவர் என்னை சபித்துப் போடுவார் என தேவனைக் கண்டு நடுநடுங்குவது, தேவ பயம் அல்ல. எங்கள் இயேசு அன்பு நிறைந்தவர்! நாங்கள் வாழும்படிக்காய் தம்மைத் தாமே பாவ நிவாரண பலியாக ஒப்புக் கொடுத்தவர். எனவே அங்கே திகிலுக்கு இடமில்லை. பயபக் த்தியோடு, தேவனுக்கு நாங்கள் கொடுக்கும் கனமே ஞானத்தின் ஆர ம்பம். ஒருவேளை இந்த உலகிலே நாங்கள் மனிதர்களைக் கண்டு முகஸ்துதி செய்யலாம், அதாவது, மனதார நன்றியறிதலுள்ளவர்களாயி ராமல், வெளியிலே எங்கள் நன்றியை காண்பிக்கலாம். ஆனால், எங் கள் தேவனுக்கு மறைவானது ஒன்றுமில்லை. எங்கள் இருதயத்தில் என்ன இருக்கின்றது என அவர் ஆராய்ந்து அறிகின்றார். “இந்த ஜனங்கள் தங்கள் வாயினால் என்னிடத்தில் சேர்ந்து, தங்கள் உதடுக ளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக் குத் தூரமாய் விலகியிருக்கிறது. அவர்கள் எனக்குப் பயப்படுகிற பயம் மனு~ராலே போதிக்கப்பட்ட கற்பனையாயிருக்கிறது.” (ஏசாயா 29:13) என கர்த்தர் தம்முடைய ஜனங்களுக்கு கூறினார். எனவே, மன தார தேவனுக்கு பயப்படுகின்றவன் தனக்குள்ளே தெய்வீக ஞானத்தை வரவழைக்கின்றான். இந்த தெய்வீக ஞானத்தினாலே எங்கள் வாழ்க் கையில் அநேக நன்மைகள் உண்டாகின்றது.

ஜெபம்:

சர்வ வல்லமையுள்ள தேவனே, உமக்கு மறைவான காரியம் ஒன்றுமில்லை. உம்மை மனதார பயபக்தியுடன் ஆராதிக்க உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபி க்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 15:8-9