புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 31, 2019)

பரலோக பொக்கிஷம்

மத்தேயு 6:20

பரலோகத்திலே உங்கள் பொக்கிஷங்களைச் சேர்த்து வையுங்கள்;


இந்த பூமிக்குரிய பொக்கி~ங்களை அல்ல, பரலோகத்திற்குரிய பொக்கி~ங்களை உங்களுக்கு சேர்த்து வையுங்கள் என்று இயேசு கூறியிருக்கின்றார். எடுத்துக் காட்டாக, ஒரு உலக பிரபல்யமான அதி சிறந்த பாடகன், தன் வாழ் நாட்கள் முழுவதும் தேவனுடைய சித் தத்திற்கு தன்னை ஒப்புக் கொடாமல், உலக சம்மந்தமானதும், காதல் சம்மந்தமானதுமான பாடல்கள் பாடி, தனக்கென கோடிக் கணக்கான ரசிக ர்களை ஏற்படுத்தி, உலகிலே சரித்திரம் படைத்து இந்த உலத்தைவிட்டு போவ தால் அவன் ஆத்துமாவிற்கு இலாபம் என்ன? ஒன்றுமில்லை என்று வேதம் கூறுகின்றது. எளிமையும் சிறுமையு மான இன்னுமொருவன் தேவனுடைய சித்தத்திற்கு தன்னை ஒப்புக் கொடுத்து, உலக பிரபல்யமற்ற தன்னுடைய சொந்த குரலினாலே, தேவனுக்கு ஏற்புடைய தெய்வீக கானங்களை பாடி, தன்னை படைத்த வரை துதித்து வந்தான். அவன் இந்த உலகத்திலே சரித்தரம் படைக் காவிட்டாலும், அவனுக்கென்று அநேக ரசிகர்கள் இந்த உலகத்திலே இருக்காவிட்டாலும், அவன் இந்த உலகத்தை விட்டு கடந்து செல்லும் போது, அக்கரையிலே இயேசுவோடு நித்தியமாக சுகித்திருப்பான். இன்றைய உலகிலே, பலவிதமான தலாந்து உள்ளவர்கள், தாங்கள் வளர்ந்து வந்த சபையிலே தேவனை ஆராதித்து வந்தால், தாங்கள் பிரபல்யமாக முடியாது என்ற நோக்கத்திற்காக, பல காரணங்களை காட்டி, பிரிந்து சென்று விடுகின்றார்கள். பிரியமானவர்களே, நாங்கள் எப்போதும் தேவனுடைய சித்தம் செய்கின்றவர்களாக இருக்க வேண்டும். எங்களுடைய சுயவிருப்பத்தின்படி எங்கள் தெரிவுகள் இரு க்கக்கூடாது. பல உலக பிரசித்தி பெற்ற மேற்கத்தைய பாடகர்கள், தங்கள் ஊரிலே, சிறிய ஆலயத்திலே ஞாயிறு ஓய்வு நாள் பாட சாலைக்கு சென்று வந்தவர்கள், அவர்களுக்குரிய ஆரம்ப பயிற்ச்சி கள் யாவும் ஆலயத்திலே கொடுக்கப்பட்டது. ஆனால் வாலிபப்பிரா யம் வந்ததும், உலக பாடல்களினால் வரும் மேன்மையை தேடிச் சென்று, தங்கள் வாழ்வை முற்றாக அழித்து, பாதி வயதிலேயே மரி த்துப் போனார்கள். தேவன் எங்களையும் எங்கள் கிரியைகளையும் ஏற்றுக் கொள்வாராக இருந்தால், நாங்கள் பிரபல்யமாவதில் தவறி ல்லை. ஆனால் நாங்கள் பிரபல்யமாகியும் எங்கள் கிரியைகள் தேவ னுக்கு ஏற்புடையதாய் இருக்காவிட்டால் அதனால் இலாபம் ஒன்று மில்லை. எனவே, பரலோகத்திற்குரியவைகளை நாடித் தேடுவோம்.

ஜெபம்:

பரலோக தந்தையே, என்னுடைய கிரியைகள் யாவும் உமக்கு ஏற்புடையதாக இருக்கும்படிக்கு என் நடைகளை நான் காத்துக் கொள்ளும்படி என்னை உணர்வுள்ளவனா(ளா)க்கும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:15